ட்ரம்ப்பின் பொய் அம்பலம் : ஈரான் பாடசாலை மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது நிரூபணம்
ஈரானில் மகளிர் பாடசாலை மீது அமெரிக்க படைகளே தாக்குதல் நடத்தின என்பதை நிரூபிக்க முக்கிய காணொளி ஆதாரத்தை தாக்குதலைக் குறித்து விசாரணை செய்யும் புலனாய்வு அமைப்பான ‘பெலிங்காஸ்ட்’ உறுதிபடுத்தியுள்ளது.
தெற்கு ஈரானின் மினாப் நகரில் பள்ளியொன்றில் நடத்தப்பட்ட வான் வழி தாக்குதலில் சுமார் 165 சிறுமிகள் கொல்லப்பட்டனர். இதற்கு அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப்படைகளே பொறுப்பு என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
திட்டவட்டமாக நிராகரித்த ட்ரம்ப்
இந்நிலையில், இந்தக் குற்றச்சாட்டை ட்ரம்ப் திட்டவட்டமாக நிராகரித்ததுடன் அதனை ஈரானே செய்ததாகவும் தெரிவித்தார். ஈரானின் ஏவுகணைகள் தரமற்றவை எனவும் அவையே பாடசாலை மீது விழுந்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதனிடையே, ஈரானுக்கு எதிராக அமெரிக்க படைகள் ‘தோமாஹாக்’ ஏவுகணைகளைப் பயன்படுத்துவதாக அந்நாட்டு இராணுவம் வெளிப்படையாக தெரிவித்திருந்தது.
காணொளி ஆதாரம்
இந்த நிலையில், ஈரானில் தாக்கப்பட்ட பள்ளியில் விழுந்த ஏவுகணைகள் ‘தோமாஹாக்’ ஏவுகணைகள் என்பதை பெப். 28-இல் தாக்குதல் நடத்தப்பட்டபோது பதிவான செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரிய வந்துள்ளதாக ‘பெல்லிங்காஸ்ட்’ வெளியிட்ட காணொளியில் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இந்தத் தாக்குதலை நிகழ்த்தியது அமெரிக்கா என்ற குற்றச்சாட்டுக்கு மேற்கண்ட காணொளி ஆதாரம் மேலதிக தரவாக அமைந்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |