தேர்தலில் தமிழரசுக் கட்சியின் அடுத்த நகர்வு : ஆரம்பமானது மத்திய குழு கூட்டம்
Sri Lankan political crisis
ITAK
Political Development
Current Political Scenario
By Shalini Balachandran
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் ஆரம்பமாகியுள்ளது.
வவுனியாவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று (09) காலை பத்து மணிக்கு கூட்டம் ஆரம்பமாகியுள்ளது.
தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் கூட்டம் இடம்பெற்று வருகின்றது.
வேட்புமனுக்கள் சமர்ப்பிப்பு
இந்தக் கூட்டத்தில் எதிர்வரும் உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்கள் சமர்ப்பிப்பு, வேட்பாளர்கள் தெரிவு மற்றும் தேர்தலைக் கையாளுதல் உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாக கலந்துரையாடப்படவுள்ளது.
குறித்த கூட்டத்தில் பொதுச்செயலாளர் எம்.எ,சுமந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான து.ரவிகரன், க.கோடீஸ்வரன், எஸ்,சிறிதரன், ஞா.சிறிநேசன், குகதாசன், சிறிநாத், மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியகுழு உறுப்பினர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |










நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
5 நாட்கள் முன்
ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே…
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்