Wednesday, Apr 9, 2025

இலங்கை தமிழரசு கட்சியின் தேசிய பட்டியல் விவகாரம்! எழுந்துள்ள கண்டனம்

Sri Lankan Tamils Tamil ITAK
By Shadhu Shanker 5 months ago
Shadhu Shanker

Shadhu Shanker

in அரசியல்
Report

இலங்கை தமிழரசு கட்சியினால் (ITAK) வழங்கப்பட்ட தேசிய பட்டியல் ஆசனம் மீள பெறப்பட வேண்டும் என அம்பாறை மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்த வேட்பாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்துள்ளார்.

அந்த தேசியபட்டியல் பெண் ஒருவருக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

அம்பாறை மாவட்டம் காரைதீவு பகுதியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் இன்று(18) விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், " தற்போதைய புதிய அரசாங்கத்தில் பல்வேறு துறைகளில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டிருக்கின்றது.

பிரித்தானியாவில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு நிகழ்வு

பிரித்தானியாவில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு நிகழ்வு

புதிய அமைச்சரவை

இவ்விடயத்தை சகலரும் அறிவீர்கள். இது தவிர புதிய அமைச்சரவையிலும் பெண்களுக்கு முக்கிய இடம் வழங்கப்பட்டிருக்கின்றது.

இலங்கை தமிழரசு கட்சியின் தேசிய பட்டியல் விவகாரம்! எழுந்துள்ள கண்டனம் | Itak Demands Return Of National List Seat

ஆனால் இன்று எமது தமிழரசுக் கட்சியில் பெண்களுக்கான உரிய இடம் வழங்கப்பட வில்லை. எனவே ஒரு பெண்ணுக்காக இந்த தேசிய பட்டியல் வழங்க வேண்டும் என்பதே எனதும் மக்களதும் நிலைப்பாடாகும்.

கிழக்கு மக்களை வடக்கு தலைமைகள் அடகு வைத்து பல ஆண்டுகளாக ஆண்டு வருகிறார்கள் என்ற பல குற்றச்சாட்டுகளை இன்று ஒட்டுக் குழுக்கள் ஏனைய தரப்பினர்கள் முன்வைத்து அவர்களது பிரதிநிதித்துவத்தை தக்க வைத்து வந்தார்கள்.

அதேபோன்று நீங்கள் தொடர்ச்சியாக வடபகுதிக்கு தேசிய பட்டியல் ஆசனத்தை பெற்றுக் கொண்டிருப்பதானது மிகவும் ஒரு பிழையான ஒரு செயலாக நான் கருதுகின்றேன்.

குறிப்பாக வடக்கு கிழக்கு என்று பிரிக்காமல் வடகிழக்கு இணைந்த ஒரு செயற்பாட்டை தான் இலங்கை தமிழரசு கட்சி செய்கின்றது ஏனைய கட்சிகளை வடகிழக்கில் மக்கள் ஓரங்கட்டி இருக்கின்றார்கள்.

தமிழரசுக்கட்சி விவகாரங்களில் தொடர்ந்து மௌனம் காக்கும் சிறீதரன்

தமிழரசுக்கட்சி விவகாரங்களில் தொடர்ந்து மௌனம் காக்கும் சிறீதரன்

தேசியப் பட்டியல்

எனவே எங்களுடைய கட்சியை பலப்படுத்த வேண்டுமாயின் கட்சியினுடைய தேசியப் பட்டியல் ஆசனம் ஒரு பெண்ணுக்கு வழங்கப்பட வேண்டும்.

இலங்கை தமிழரசு கட்சியின் தேசிய பட்டியல் விவகாரம்! எழுந்துள்ள கண்டனம் | Itak Demands Return Of National List Seat

அது மாத்திரமன்றி தலைவர் மற்றும் செயலாளருக்கு இவ்வாறான தேசிய பட்டியல் ஆசனங்கள் வழங்குவதை நிறுத்த வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் நானும் இத்தேர்தலில் களமிறங்கி இலங்கை தமிழரசு கட்சிக்காக அதிகளவான வாக்குகளை பெற்று தோல்வியுற்றிருந்தாலும் இலங்கை தமிழரசு கட்சியின் வளர்ச்சிக்காகவும் இலங்கை தமிழர் கட்சியின் முன்னேற்றத்திற்காகவும் முயற்சிகளை செய்து வருகின்றேன்.

இனியாவது தேசிய பட்டியல் தொடர்பான விடயத்தை ஆராய்கின்ற போது கிழக்கு மக்களின் கருத்துக்களையும் உள்வாங்க வேண்டும். வெறுமனே 11 பேர் அல்லது 12 பேர் கூடி எடுக்கின்ற குழு முடிவுகளை இனியாவது தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

கிழக்கு மாகாணத்தில் இன்று எமது அயராத முயற்சியினால் தான் தமிழ் தேசியம் கோலோச்சி காணப்படுகின்றன. வடக்கில் தமிழரசு கட்சி தோல்வி கண்டிருக்கின்றது என்பதனை எமது கட்சியின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் (M. A. Sumanthiran)  தெரிவித்து இருக்கின்றார். இதற்கு காரணம் என்ன என்பதை நாம் பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும்.

குறிப்பாக மக்கள் உங்களை நிராகரித்திருக்கின்றார்கள். மக்களுடைய விருப்பத்திற்கு ஏற்றவாறு உங்கள் செயல்பாடு அமையாத காரணத்தினால் தான் மக்கள் இன்று தமிழரசு கட்சியை தேர்தலில் நிராகரிக்கின்றார்கள்.

சுமந்திரனின் எதிர்கால அரசியல்: தமிழரசுக்கட்சிக்குள் புதிய காய் நகர்த்தல்

சுமந்திரனின் எதிர்கால அரசியல்: தமிழரசுக்கட்சிக்குள் புதிய காய் நகர்த்தல்

தமிழரசு கட்சி

உங்களுக்குரிய பதவிகளை சுயநலமாக எடுப்பதனால் தான் ஏனைய கட்சிகள் எம்மை விமர்சித்து மக்களிடம் தங்களது பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துகின்றன. கடந்த காலங்களில் இவ்வாறான சந்தர்ப்பங்களின் போது பல ஆசனங்கள் இழந்திருப்பதை நாம் உணர வேண்டும்.

இலங்கை தமிழரசு கட்சியின் தேசிய பட்டியல் விவகாரம்! எழுந்துள்ள கண்டனம் | Itak Demands Return Of National List Seat

இதற்கு உதாரணமாக மட்டக்களப்பில் ஆயுத குழுக்கள் ஒட்டுக் குழுக்கள் இன்றி தமிழரசுக் கட்சி வெற்றி ஈட்டி இருக்கின்றார்கள். இதன்மூலம் அப்பகுதி மக்கள் தனித்துவமாக களம் இறங்கி வாருங்கள் என்று செய்தியை எமக்கு தெரிவித்திருக்கின்றார்கள்.

இதனூடாக எமக்கு ஆணை வழங்கி இருக்கின்றார்கள். இன்று கிழக்கு மக்கள் தந்த ஆணையை பெற்றுக் கொண்டு நீங்கள் ஒரு பொதுச் செயலாளராக இருந்து கொண்டு அந்தப் தேசியப் பட்டியல் பதவியை பெற்றுச் சென்றமை எவ்வாறு நியாயம் ஆகும்.

எவ்வாறு இதை நாம் ஏற்றுக் கொள்வது. ஏழு ஆண்கள் இந்த சந்தர்ப்பத்தில் தெரிவாக இருக்கின்ற வேளையில் ஒரு பெண்ணை நியமிக்க ஏன் நீங்கள் எவரும் சிந்திக்கவில்லை. இப்பெண்கள் இந்நாட்டின் கண்கள். பெண்களை நாங்கள் கண்ணியமாக பார்க்க வேண்டும்.

இந்த ஏழு ஆசனங்களையும் பெற்று கொள்வதற்கு பல பெண்கள் எமக்காக அயராத முயற்சிகளை மேற்கொண்டு வாக்களித்திருக்கின்றார்கள். அவர்களது வாக்கு பலத்தினை உதாசீனம் செய்யாமல் நிச்சயமாக இந்த தேசிய பட்டியல் ஆசனத்தில் மாற்றம் கொண்டு வந்து பெண்களுக்கு வழங்குவது மிக அவசியமாகும்.

அத்துடன் அவசரமாக தமிழரசு கட்சியின் தலைவர் அல்லது செயலாளர் பதவி என்பது கிழக்கு மாகாணத்திற்கு வழங்கப்பட வேண்டும்.

இதனூடாக பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்ற எமது கட்சியினை சுத்தப்படுத்தி இலங்கை தமிழரசு கட்சியை அனைவரும் சேர்ந்து பயணம் செய்வதற்கு முன்வர வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்" என்றார்.

கட்சியின் பின்னடைவிற்கு இது தான் காரணம்! டக்ளஸ் தேவானந்தா வெளிப்படை

கட்சியின் பின்னடைவிற்கு இது தான் காரணம்! டக்ளஸ் தேவானந்தா வெளிப்படை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!                                
ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Pontoise, France

05 Apr, 2025
மரண அறிவித்தல்

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
மரண அறிவித்தல்

கரையூர், பருத்தித்துறை

07 Apr, 2025
மரண அறிவித்தல்

இறக்குவானை, கந்தர்மடம், யாழ்ப்பாணம்

07 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, Toronto, Canada

10 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

31 Mar, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, மட்டக்களப்பு

10 Apr, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், கொழும்பு

01 Apr, 2015
மரண அறிவித்தல்

குடத்தனை, வராத்துப்பளை, Montreal, Canada, Cornwall, Canada

07 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

11 Mar, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, London, United Kingdom

08 Apr, 2022
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், Newmarket, Canada

07 Apr, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Brampton, Canada

02 Apr, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

06 Apr, 2025
மரண அறிவித்தல்

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Witten, Germany

08 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
மரண அறிவித்தல்

நவிண்டில், சுழிபுரம், London, United Kingdom

27 Mar, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

07 Apr, 2022
மரண அறிவித்தல்

London, United Kingdom, Hayling Island, United Kingdom

19 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொழும்பு

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Muscat, Oman, Toronto, Canada

05 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Scarborough, Canada

05 Apr, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020
13ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், Bad Marienberg, Germany, Hayes, United Kingdom

31 Mar, 2025