தமிழரசுக் கட்சியின் தலைமை சி.வி.கே சிவஞானத்திற்கு : சுமந்திரன் அறிவிப்பு
தமிழரசுக்கட்சியின் பதில் தலைவராக அக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் சி.வி.கே சிவஞானம் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை வவுனியாவில் இன்று (28) இடம்பெற்ற மத்தியகுழு கூட்டத்தின் இடைவெளியின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் குறிப்பிட்டுள்ளார்.
கட்சியின் தலைவர் பதவி விலகினால் எஞ்சிய காலத்திற்கு இன்னொரு தலைவர் நியமிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் சி.வி.கே சிவஞானம் பதில் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு தலைவராக மாவை சேனாதிராஜா தொடர்ந்து செயற்படுவார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய முடிவு பிரிவினை இல்லாமல் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.