கூட்டு களவாணிகளின் திட்டமிட்ட சதியே சுமந்திரனுக்கான பதில் பொதுச்செயலாளர் பதவி
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய பதில் பொதுச்செயலாளராக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் (m.a.sumanthiran) நியமிக்கப்பட்டமை கூட்டு களவாணிகளின் திட்டமிடப்பட்ட சதி என பிரித்தானியாவின் (United Kingdom) அரசியல் ஆய்வாளர் தி.திபாகரன் (T. Thibakaran) கடுமையாக சாடியுள்ளார்.
குறித்த விடயத்தை லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “மக்களால் தோற்கடிக்கப்ட்ட சுமந்திரனை கட்சியில் முக்கிய இடத்தில் அதிகாரம் செலுத்தும் வகையில் வைப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கட்சியில் இருப்பவர்கள் அனைவரும் ஜால்ரா அடிப்பவர்கள் அத்தோடு அதிகாரமிக்க இடத்தில் ஒட்டி வாழ்பவர்கள், அது சி.வி.கே சிவஞானமாக (C. V. K. Sivagnanam) இருந்தாலும் சரி மற்றும் சத்தியலிங்கமாகவிருந்தாலும் (P. Sathiyalingam) சரி.
இவ்வாறு தமிழரசுக்கட்சிக்குள் பலதரப்பட்ட கறுத்த ஆடுகள் திணிக்கப்பட்டு குறித்த நடவடிக்கைகள் திட்டமிட்டு மேற்கொள்ளபடுகின்றது” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழரசு கட்சியின் தற்போதைய நிலை, தமிழரசு கட்சியின் தோல்விக்கான காரணம், சி.வி.கே சிவஞானம் மற்றும் சுமந்திரனின் கூட்டணி அத்தோடு எதிர்கால தமிழ் அரசியல் குறித்து அவர் விரிவாக தெரிவித்த கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


தாய்மொழிக்காய் ஆயுதம் தரித்துத் தம்முயிர் ஈர்ந்தவர்கள் ஈழ மாவீரர்கள் ! 18 மணி நேரம் முன்

ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
2 வாரங்கள் முன்