சிங்கப்பூரில் கோட்டாபய கைதாகலாம்! மடக்கும் சர்வதேச அதிகார வரம்பு
சிங்கப்பூரில் கோட்டாபய கைதாகலாம்
சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்பு செயலாளரும், முன்னாள் அரச தலைவருமான கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூரில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படவேண்டும் எனக்கோரி சிங்கப்பூர் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ள குற்றவியல் முறைப்பாட்டு அறிக்கைக்குரிய பதிலை மனித உரிமை சட்டவாளர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
63 பக்கங்களை கொண்ட இந்த முறைப்பாட்டில் உலகளாவிய மனித உரிமை சாசனமாக கருதப்படும் ஜெனிவா ஒப்பந்தந்தத்துக்கு அமைய, தமிழ் மக்கள் மீது போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களை செய்தான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
குற்றவியல் நகர்வுக்கு காத்திருக்கும் சட்டவாளர்கள்
தென்னாபிரிக்காவைத் தளமாகக் கொண்ட சர்வதேச உண்மை மற்றும் நீதித்திட்டம் கடந்த 23 ஆம் திகதி இந்த அறிக்கையை கையளித்த விடயத்தை சிங்கப்பூர் சட்டமா அதிபர் திணைக்களம் ஏற்றுக்கொண்டாலும், இந்த விடயத்தில் அடுத்த கட்டம் குறித்து சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து பதில் ஏதும் அறிவிக்கப்படவில்லை.
இதன் பின்னணி மற்றும் பல முக்கிய செய்திகளை இன்றைய செய்தி வீச்சில் காண்க,
