யாழில் குருக்களின் வீட்டில் தங்க நகைகளை அள்ளிச் சென்றவர் சிக்கினார்

arrest police jaffna home robery hindu priest
By Jaso Feb 18, 2022 03:10 PM GMT
Report

யாழில் குருக்கள் ஒருவரின் வீட்டில் 24 பவுண் தங்க நகைகளை திருடிச் சென்ற பிரதான சந்தேக நபர் உட்பட மூவரை நகைகளுடன் யாழ் மாவட்ட குற்றத்தடுப்புபிரிவினர் கைது செய்துள்ளனர்.

கடந்த மாதம் 28ம் திகதி மாலை 3 மணி தொடக்கம் 4 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் யாழ் பிறவுண் வீதியில் அமைந்துள்ள குருக்கள் வீட்டினுள் இந்த திருட்டு சம்பவம் இடம் பெற்றுள்ளது.

குருக்கள் வழமைபோல மாலைவேளை கோவிலுக்கு செல்வதை அவதானித்த பிரதான சந்தேகநபர் வீட்டின் முன் கதவுகள் பூட்டப்பட்டு இருந்தமையால் பின் பக்கமாக சென்று பின்பக்க கதவை உடைத்து வீட்டின் சாமி அறைக்குள் சென்று அங்கிருந்த 24 பவுண் தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளார்.

இதில் தாலிக் கொடி, சங்கிலி கைச்சங்கிலி, காப்பு போன்ற நகைகள் அடங்கும். இது தொடர்பில் யாழ் காவல் நிலையத்தில் குருக்களால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. சம்பவம் தொடர்பில் யாழ் மாவட்ட குற்றத்தடுப்புபிரிவின் பொறுப்பதிகாரி நிகால் பிரான்சிஸ் தலைமையிலான குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டனர்.

பெறப்பட்ட தகவல்கள் மற்றும் விசாரணைகளின் அடிப்படையில் பிரதான சந்தேகநபர் யாழ் கஸ்தூரியார் வீதியில் வைத்து கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் திருடப்பட்ட நகைகளை, திருட்டுக்கு உடந்தையாக இருந்த நபர் ஒருவர் மூலமாக வங்கியில் பணிபுரியும் ஒருவரின் உதவியுடன் வேலணையில் உள்ள வங்கி ஒன்றில் அடகு வைத்தமை தெரிய வந்தது.

இவ்வாறு அடகுவைத்ததன் மூலம் பெறப்பட்ட பணத்தை கொண்டு கெரோயின் கொள்வனவு செய்ததாக அவர் தெரிவித்தார்.அத்துடன் அதிக கெரோயின் பயன்பாட்டினால் அதனை உட்கொள்வதற்கு பெருமளவு பணம் தேவைப்படுவதால் இப்படியாக திருட்டுக்களில் ஈடுபடுவதாக காவல்துறையிடம் அவர் தெரிவித்தார்.

மேலும் ஒரு நெக்லஸ் மற்றும் காப்பு ஒன்றும் தனியார் அடகு நிறுவனம் ஒன்றில் வைக்கப்பட்டுள்ளதால் அதனை மீட்கும் முயற்சியினை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

திருடப்பட்ட மிகுதி நகைகள் மீட்கப்பட்டன. மேலும் பிரதான சந்தேகநபர் உட்பட உடந்தையளித்த குற்றச்சாட்டில் சுன்னாகம் பகுதியை சேர்ந்த 28 வயது நபரும் நகைகளை அடகு வைக்க உதவிய வேலணை பகுதியை சேர்ந்த 30 வயதுடைய நபரும் கைது செய்யப்பட்டனர்.

கெரோயின் பாவனையால் யாழில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளதுடன் கெரோயின் பாவனையில் சிக்கும் இளைஞர்கள் தொடர்பில் பெற்றோர் கூடிய கவனம் செலுத்தும்படி காவல்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ReeCha
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்