யாழில் இடம்பெற்ற கோர விபத்து - சம்பவ இடத்திலேயே பலியான உயிர்!
Sri Lanka Police
Jaffna
Sri Lanka
Accident
Death
By Kalaimathy
யாழ்ப்பாணம் நிலாவரை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
நிலாவரை பகுதியில் முதியவர் ஒருவர் துவிச்சக்கர வண்டியில் பயணம் செய்து கொண்டிருந்த போது, எதிரில் வந்த டிப்பர் வாகனம் மோதியதில் முதியவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழப்பு
விபத்தில் சிறுப்பிட்டி மேற்கை சேர்ந்த சுப்பையா இரத்தினசிங்கம் வயது 63 என்பவரே சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் அச்சுவேலி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.




31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்