யாழ்ப்பாணத்தில் சற்று முன் கோர விபத்து - ஸ்தலத்திலேயே பலியான இரண்டு இளம் பெண்கள்!
Jaffna
By pavan
யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டிப் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததுடன் மற்றொரு பெண் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளும் மகிழுந்தும் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
காவல்துறையினர் விசாரணை
ஆறு பேர் மகிழுந்தில் பயணித்த நிலையில் இரண்டு பேர் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக ஊர்காவற்றுறை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி