யாழில் பேருந்து சாரதி மற்றும் நடத்துநரை தாக்கிய பிரதான சந்தேகநபர் கைது!
யாழ்ப்பாணம்(Jaffna) - புன்னாலைக்கட்டுவன் பகுதியில் தனியார் பேருந்து ஒன்றின் சாரதி மற்றும் நடத்துநரை தாக்கிய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகருக்கு கீழ் இயங்கும் காவல்துறை புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இன்று(15.12.2024) இடம்பெற்றள்ளது.
கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் புன்னாலைக்கட்டுவன் - யாழ்ப்பாணம் வழித்தட தனியார் பேருந்தினை மறித்து 3 பேர் கொண்ட குழுவினர், பேருந்தின் நடத்துனர் மீதும் சாரதி மீதும் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
கைது நடவடிக்கை
இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் மேற்கொண்ட முறைப்பாடு தொடர்பாக தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபர் உரும்பிராய் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் யாழ்ப்பாணம் காவல்துறை நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவர் தலைமறைவாகி உள்ளனர்.

கைதானவரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில், இன்னொருவரின் தூண்டுதலின் பேரிலேயே தாங்கள் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன், குறித்த சம்பவம் கடந்த ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி இடம்பெற்ற நிலையில், சந்தேகநபர்களை கைது செய்யுமாறு கோரி, தனியார் பேருந்து சங்கத்தினர் கடந்த ஏப்ரல் மாதம் 20ஆம் திகதியன்று போராட்டம் ஒன்றினையும் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 4 நாட்கள் முன்