தமிழர்களுடைய தொழில்நுட்ப அறிவை மேம்படுத்த நீங்களும் பங்காளர் ஆகுங்கள் - கந்தையா பாஸ்கரன் வேண்டுகோள்
தமிழர்களுடைய தொழிநுட்ப அறிவை மேம்படுத்துவதற்கும், அதனை தக்க வைத்துக் கொள்வதற்கும் அவர்கள் மீது அக்கறைகளை செலுத்த வேண்டிய தேவை இருக்கிறது.
குறிப்பாக, புலம்பெயர் சமூகத்தவர்கள், புலம்பெயர் தொழிலதிபர்கள், முன்வந்து யாழ். தொழில்நுட்பக் கல்லூரியை மேம்படுத்துவதற்கும், அங்கு காணப்படும் தேவைகளை - வெற்றிடங்களை நிரப்புவதற்கும் ஆக்கபூர்வமான வழிவகைகளை செய்ய வேண்டும் என ஐ.பி.சி தமிழ் ஊடகக் குழுமத்தின் தலைவரும் பிரபல தொழிலதிபருமான கந்தையா பாஸ்கரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
யாழ். தொழில்நுட்பக் கல்லூரிக்கும் அங்கு கற்கும் மாணவர்களுக்கும் நிறைய உதவிகள் தங்குதடையின்றி கிடைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு
அவசியம் தேவைப்பாடாக இருந்த கற்றல், விளையாட்டு, தொழில்நுட்ப உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது. இதன்போதே இந்தக் கோரிக்கையை அவர் முன்வைத்துள்ளார்.
யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் அமைந்துள்ள இக்கல்லூரியானது பாரம்பரியம் நிறைந்ததும் 75 வருடங்களை தாண்டி இயங்க கூடியதுமான ஒரு கல்லூரியாகும்.
எவ்வித வளர்ச்சிப்படிகளை காணாமலும், மாணவர்களின் அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்படாமலும், எவ்வித அபிவிருத்தி பணிகளும் மேற்கொள்ளப்படாமலும் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தற்போது இயங்கி வருகிறது.
இதேவேளை, தொழில்நுட்பக் கல்லூரியில் துறைசார்ந்த கற்கைநெறிகளை கற்கும் மாணவர்கள் 25 வருட பழமையான கருவிகளை உபயோகித்தே புதிய தொழில்நுட்பங்களை கற்று வருகின்றனர். துறைசார் கற்கைநெறிகளுக்கு போதியளவு கருவிகள் இல்லாத நிலையும் அங்கிருக்கிறது.
இவ்வாறாக இருக்கும் இந்தக் கல்லூரியை மீள் நிர்மாணிக்க, அங்கு கற்கும் மாணவர்களை அறிவுத்திறன் கொண்டவார்களாக உருவாக்க, கருவிகளை பெற்றுக்கொடுக்க அந்தக் கல்லூரியின் பழைய மாணவர்கள், புலம்பெயர் சமூகத்தவர்கள், புலம்பெயர் தொழிலதிபர்கள் உட்பட அனைவரும் முன்வர வேண்டும் என கந்தையா பாஸ்கரன் தனது எதிர்பார்ப்பை வெளியிட்டுள்ளார்.
தொழில்நுட்பக் கல்லூரியின் தற்போதைய நிலை
