இன்று நாட்டுக்கு அழைத்து வரப்படும் இஷாரா செவ்வந்தி

CID - Sri Lanka Police Crime Branch Criminal Investigation Department Nepal Crime NPP Government
By Thulsi Oct 15, 2025 03:30 AM GMT
Report

புதிய இணைப்பு

கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பாக தேடப்பட்டு வந்த இஷாரா செவ்வந்தி நேற்று (14) நேபாளத்தில் (Nepal) வைத்து கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் இன்று (15) அவர் இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட 6 சந்தேகநபர்களும் இன்று (15) சிறீலங்கன் ஏர்லைன்ஸ் (SriLankan Airlines) விமானம் மூலம் நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காட்டிக் கொடுத்தது இவர் தான்..! இஷாரா செவ்வந்தி வழங்கிய பரபரப்பு வாக்குமூலம்

காட்டிக் கொடுத்தது இவர் தான்..! இஷாரா செவ்வந்தி வழங்கிய பரபரப்பு வாக்குமூலம்

இரண்டாம் இணைப்பு

கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் உதவி காவல்துறை கண்காணிப்பாளர் எஃப்.யு.கே. வுட்லர் தெரிவித்துள்ளார்.

இன்று நாட்டுக்கு அழைத்து வரப்படும் இஷாரா செவ்வந்தி | Jaffna Couple Arrested With Ishara Sewwandi Nepal

இஷாரா செவ்வந்தி உள்ளடங்கலாக ஐவர் நேபாளத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களுள் நேபாளத்தில் வைத்து இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்ததாகக் கூறப்படும் யாழை சேர்ந்தவர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நாட்டை விட்டு தப்பிச் சென்ற சுமார் 40 திட்டமிட்ட குற்றவாளிகளுக்கு இன்டர்போல் மூலம் சிவப்பு அறிவிப்புகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக உதவி காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டவர்களுள் இஷாரா செவ்வந்தியும் ஒருவர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2025 ஆம் ஆண்டில் இதுவரை சிவப்பு அறிவிப்புகள் பிறப்பிக்கப்பட்ட 18 பேர் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 


முதலாம் இணைப்பு

யாழ்ப்பாணத்தை (Jaffna) சேர்ந்த தம்பதி ஒன்றும் இஷாரா செவ்வந்தியுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நேபாளத்தில் இன்று (14.10.2025) வீடொன்றில் பதுங்கியிருந்த நிலையில் செவ்வந்தி உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2025 பெப்ரவரி 19 ஆம் திகதி, கணேமுல்ல சஞ்சீவ புதுக்கடை இலக்கம் 05 நீதவான் நீதிமன்றத்திற்குள் சுட்டுக் கொல்லப்பட்டார். 

இஷாரா செவ்வந்தி உட்பட 5 பேர் நேபாளத்தில் கைது

இஷாரா செவ்வந்தி உட்பட 5 பேர் நேபாளத்தில் கைது

தலைமறைவாக இருந்த நிலையில் கைது

25 வயதான பிங்குர தேவகே இஷாரா செவ்வந்தி இந்தக் கொலையில் உதவியாகவும், உடந்தையாகவும் செயல்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.  

 இன்று நாட்டுக்கு அழைத்து வரப்படும் இஷாரா செவ்வந்தி | Jaffna Couple Arrested With Ishara Sewwandi Nepal

இவர் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை வழிநடத்தியதாகவும் திட்டத்தைத் திட்டமிட்டதாகவும் காவல்துறை விசாரணையில் தெரியவந்தது.

துப்பாக்கிச் சூடு நடந்த நாளிலிருந்து இவர் தலைமறைவாக இருந்த நிலையில், குற்றப் புலனாய்வு திணைக்களம், மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு மற்றும் நேபாள பாதுகாப்புப் படையினரால் இஷாரா செவ்வந்தியை கைது செய்வதற்கு சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


ஐந்து சந்தேக நபர்கள் கைது

கைது செய்யப்பட்ட குழுவில் கம்பஹா மற்றும் நுகேகொடையை சேர்ந்த 2 பேரும், யாழ்ப்பாணத்தை சேர்ந்த தம்பதியும் உள்ளடங்குவதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இன்று நாட்டுக்கு அழைத்து வரப்படும் இஷாரா செவ்வந்தி | Jaffna Couple Arrested With Ishara Sewwandi Nepal

இஷாரா செவ்வந்தியுடன் சிக்கி யாழ் தம்பதி தலைநகர் காத்மாண்டுவிலில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகுதியில் இஷாரா செவ்வந்தி மற்றும் குழுவினர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை, கைது செய்யப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ படுகொலை வழக்கின் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட ஏனைய சந்தேக நபர்களை நாளை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் இப்படிப்பட்டவர் - சரத் பொன்சேகா

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் இப்படிப்பட்டவர் - சரத் பொன்சேகா

சரத் பொன்சேகா வசம் உள்ள அந்த குரல் பதிவு - சவால் விடும் நாமல்

சரத் பொன்சேகா வசம் உள்ள அந்த குரல் பதிவு - சவால் விடும் நாமல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025