ஈழத்தில் தொடரும் பேரினவாத ஆக்கிரமிப்பு - தமிழர்களிடமிருந்து பறிபோகும் மற்றுமொரு புராதன சின்னம்!

Tamils Jaffna Sri Lanka Government Of Sri Lanka Sonnalum Kuttram
By Kalaimathy Mar 17, 2023 05:47 AM GMT
Report

யாழ்ப்பாணம் நெடுந்தீவு வெடியரசன் கோட்டையை அபகரிக்கும் முயற்சியை சிறிலங்கா தொல்பொருள் திணைக்களம் முன்னெடுத்துள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையின் வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளிலுள்ள வரலாற்று இடங்களை சிறிலங்கா தொல்பொருள் திணைக்களம் அபகரித்து வரும் நிலையிலேயே நெடுந்தீவிலும் தற்போது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

நெடுந்தீவு தமிழர்களுடைய வரலாற்றை பறைசாற்றும் தலைசிறந்த சுற்றுலாத்தளமாக காணப்படும் நிலையில் அங்கு திட்டமிட்டு பௌத்தமயமாக்கல் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அனுமதி இன்றி விளம்பரப் பலகை

ஈழத்தில் தொடரும் பேரினவாத ஆக்கிரமிப்பு - தமிழர்களிடமிருந்து பறிபோகும் மற்றுமொரு புராதன சின்னம்! | Jaffna Delft Island Vediyarasan Fort Lost Tamils

இவ்வாறான நிலையில், கோட்டை மற்றும் மாவிலி இறங்குதுறைப் பகுதிகளில் பிரதேச சபையின் அனுமதி இன்றி சிங்கள மற்றும் ஆங்கில மொழிகளில் விளம்பர பலகையும் நாட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு நாட்டப்பட்டுள்ள பதாதையை அகற்றி கோட்டையின் பாரம்பரியத்தையும், வரலாற்றையும் பேண உரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்றின் வருமான முகாமைத்துவம் மற்றும் பராமரிப்புப் பணிகள் சிறிலங்கா தொல்பொருள் திணைக்களத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாணம் நெடுந்தீவிலும் இவ்வாறான சம்பவம் தற்போது இடம்பெற்றுள்ளது.

பௌத்த திணிப்பிற்கு முற்றுப்புள்ளி

ஈழத்தில் தொடரும் பேரினவாத ஆக்கிரமிப்பு - தமிழர்களிடமிருந்து பறிபோகும் மற்றுமொரு புராதன சின்னம்! | Jaffna Delft Island Vediyarasan Fort Lost Tamils

ஆகவே கறைபடியாத வீரத் தமிழர் வரலாற்றுக்குள் பௌத்தத்தை திணிக்கும் செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான செயற்பாடுகள் மூலம் அதிகாரிகள் இனங்களுக்கிடையில் விரோதங்களை ஏற்படுத்தும் நடவடிக்கைகளையே தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றனர் எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

நாட்டு மக்களுக்குள் குரோதங்களை ஏற்படுத்தி விட்டு ஒருபோதும் பொருளாதார மீட்சியைப் பெற முடியாது என்பதனை உரிய தரப்பினர் உணர்ந்துகொள்ள வேண்டும்.

பௌத்த எச்சங்களாக சித்தரிப்பு

ஈழத்தில் தொடரும் பேரினவாத ஆக்கிரமிப்பு - தமிழர்களிடமிருந்து பறிபோகும் மற்றுமொரு புராதன சின்னம்! | Jaffna Delft Island Vediyarasan Fort Lost Tamils

தமிழர்களுடைய வரலாற்றை திரிவுபடுத்தி அதனூடாக மேற்கொள்ளப்படவுள்ள பௌத்தமயமாக்கல் செயற்பாடுகளை உரிய அதிகாரிகள் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார். 

கி.மு 200ஆம் ஆண்டுகளில் யாழ்ப்பாண இராசதானிகளின் கீழ் இருந்த நெடுந்தீவு மற்றும் காரைநகர் பகுதிகளை ஆட்சி செய்த சிற்றரசனே வெடியரச மன்னன்.

இந்த நிலையில் வெடியரசன் கோட்டையின் எச்சங்களை பௌத்த தாது கோபுர எச்சங்களாக சித்தரித்து சிறிலங்கா தொல்பொருள் திணைக்களம் பௌத்தமயமாக்கல் செயற்பாட்டினை முன்னெடுத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ReeCha
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026