யாழில் முதல் முறையாக அதிகளவில் மீட்கப்பட்டுள்ள பெறுமதிமிக்க போதைப்பொருட்கள்
யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் பெருந்தொகையிலான பெறுமதிமிக்க அபின் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வல்லிபுரம் கடற்கரைப் பகுதியில் மூன்று பொதிகளில் இருந்து குறித்த போதைப்பொருட்கள் இன்று (08) காலை மீட்கப்பட்டுள்ளது.
நாடாளாவியரீதியில் பதில் காவல்துறை மா அதிபரின் பணிப்பில் யுக்திய போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் வடமாகாண சிரேஸ்ட பிரதி காவல்துறை மா அதிபர், யாழ் மாவட்ட பிரதி காவல்துறை மா அதிபர், காங்கேசன்துறை பிராந்திய சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் ஆகியோரின் வழிகாட்டலில் பருத்தித்துறை காவல்துறையினருக்கு கிடைத்த புலனாய்வுத் தகவலுக்கமைய குறித்த மீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
பெருந்தொகை போதைப்பொருட்கள் மீட்பு
மீட்கப்பட்டுள்ள 48 கிலோ நிறை கொண்ட அபின் போதைப்பொருளின் பெறுமதி 86 கோடி ரூபாய் எனவும், 28 கிலோ நிறை கொண்ட கேரள கஞ்சாவின் பெறுமதி 45 இலட்சம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை காவல் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த அமரசிங்க தலைமையிலான காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வடமாகாணத்தில் அபின் போதைப்பொருள் பாரியளவில் கைப்பற்றப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்....! |