யாழில் கடத்தப்பட்ட யுவதி....! பரபரப்பு காணொளி : காவல்துறையினர் தீவிர தேடுதல்

Sri Lanka Police Jaffna Sri Lanka Sri Lanka Police Investigation
By Sathangani May 22, 2025 06:38 AM GMT
Report

யாழ்ப்பாணம் (Jaffna) - தெல்லிப்பழை காவல்துறை பிரிவிற்குட்பட்ட இளவாலை சந்திக்கு அருகாமையில் நேற்றையதினம் (21) யுவதி ஒருவர் கடத்தப்பட்ட நிலையில் காவல்துறையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் - பண்டத்தரிப்பு பகுதியை சேர்ந்த 22 வயது யுவதியும், பூநகரி கௌதாரிமுனை பகுதியை சேர்ந்த 22 வயது இளைஞனும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துள்ளனர்.

பெண் வீட்டாருக்கு பயந்து இருவரும் தலைமறைவாக இருந்துள்ளனர். பின்னர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இளவாலை காவல் நிலையத்திற்கு சென்றனர்.

யாழ்.நல்லூரில் முளைத்த சர்ச்சைக்குரிய அசைவ உணவகம் - அகற்றப்பட்ட விளம்பரப்பலகை

யாழ்.நல்லூரில் முளைத்த சர்ச்சைக்குரிய அசைவ உணவகம் - அகற்றப்பட்ட விளம்பரப்பலகை

நீதிமன்றின் தீர்ப்பு 

இதன்போது அங்கு வந்த பெண் வீட்டார் குறித்த யுவதியை பிரிப்பதற்கு முயற்சி செய்தபோதும், இருவருக்கும் 18 வயது நிறைவடைந்தலாலும், இருவரும் பிரிவதற்கு விருப்பம் தெரிவிக்காத நிலையில் அவர்களை பிரிக்க முடியாது என இளவாலை காவல்துறையினர் தெரிவித்தனர்.

யாழில் கடத்தப்பட்ட யுவதி....! பரபரப்பு காணொளி : காவல்துறையினர் தீவிர தேடுதல் | Jaffna Girl Kidnapped Police Intensive Search

பின்னர் பெண் வீட்டாரின் கட்டாயத்தின் பேரில் இந்த வழக்கு மல்லாகம் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் வழக்கை விசாரித்த நீதிமன்றம் இருவருக்கும் திருமண வயது வந்துவிட்டதால் அவர்களை பிரிக்க முடியாது, அவர்களது விருப்பம் போல சேர்ந்து வாழலாம் என தீர்ப்பளித்தது.

இவ்வாறான பின்னணியில் வழக்கு நிறைவடைந்து வரும்போது பிற்பகல் 4.37 மணியளவில் பெண்ணின் சகோதரன் உள்ளிட்ட சிலர் அடங்கிய குழுவினர் அந்த இளைஞனை தாக்கிவிட்டு யுவதியை வாகனத்தில் ஏற்றி கடத்திச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

பெரிய வெங்காயத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

பெரிய வெங்காயத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

வைத்தியசாலையில் அனுமதி

இந்நிலையில் இது குறித்து தெல்லிப்பழை காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதுடன் காயமடைந்த இளைஞன் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழில் கடத்தப்பட்ட யுவதி....! பரபரப்பு காணொளி : காவல்துறையினர் தீவிர தேடுதல் | Jaffna Girl Kidnapped Police Intensive Search

யுவதியை கடத்திச் செல்லும் காணொளியானது அந்த பகுதியில் காணப்படும் சி.சி.டிவி கமெராவில் பதிவாகியிருக்கும் நிலையில் விசாரணைகளை மேற்கொண்ட தெல்லிப்பழை காவல்துறையினர் தேடுதல் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மின் கட்டண திருத்தம் குறித்து பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாய்ப்பு

மின் கட்டண திருத்தம் குறித்து பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாய்ப்பு

செய்திகள் பு.கஜிந்தன்



 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!      


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021