தனக்கு எதிராக 19 வழக்குகள் - சபையில் வெளிப்படுத்திய அர்ச்சுனா எம்.பி
புதிய இணைப்பு
வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்த தமக்கு எதிராக 19 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archchuna) தெரிவித்தார்.
இன்றை நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அம்மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன் எனவும் அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.
முதலாம் இணைப்பு
யாழ்.போதனா வைத்தியசாலையில் (Jaffna Teaching Hospital) நோயாளர் என்ற ரீதியில் மாத்திரமே எம்.பி அர்ச்சுனா உள்ளே அனுமதிக்கப்படுவார் எனவும், வேறு எந்த காரணத்திற்காகவும் அவர் உள்நுழைய முடியாது என்றும் வைத்தியசாலையின் பணிப்பாளர் அலுவலகம் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு (Ramanathan Archchuna) அறிவித்தல் விடுத்துள்ளது.
அர்ச்சுனாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் கடந்த 16ஆம் திகதி யாழ். நீதிவான் நீதிமன்றத்தினால் 100,000 ரூபா பெறுமதியான சரீரப் பிணை வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த வழக்கு அடுத்த வருடம்(2025) பெப்ரவரி 7ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அர்ச்சுனா செல்ல வேண்டுமெனில் வைத்தியசாலை நிர்வாகத்திடம் அவர் முன் அனுமதி பெற வேண்டும் எனவும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை தொகுத்து வருகின்றது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகள்,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |