இராணுவ பிடியில் யாழ். போதனா வைத்தியசாலையின் காணி - பறந்த அவசர கோரிக்கை
இராணுவத்தினரின் பிடியிலுள்ள யாழ். போதனா மருத்துவமனைக்கு (Teaching hospital Jaffna) சொந்தமான காணியை விடுவிக்க வேண்டும் என மருத்துவமனையின் பிரதி பணிப்பாளர் சி. யமுனானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கொட்டடி - மீனாட்சிபுரம் பகுதியில் யாழ். போதனா மருத்துவமனைக்கு சொந்தமான 1.4 ஏக்கர் காணி இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ளது.
2010 ஆம் ஆண்டு தொடக்கம் இந்தக் காணியை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்து வருகின்ற போதிலும் இன்று வரை காணி விடுவிக்கப்படவில்லை.
வடமாகாண ஆளுநரிடம் கோரிக்கை
இந்தக் காணி யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் மேலதிக அபிவிருத்தி தேவைக்காக ஒதுக்கப்பட்டிருந்த காரணியாகும்.
இந்தக் காணியில் பல வருடங்களாக இராணுவத்தினர் நிலை கொண்டிருப்பதால் காணியை யாழ். போதனா மருத் துவமனையின் தேவைக்காக பயன்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது.
இந்தக் காணியை உடனடியாக விடுவித்துத் தருவதற்கு வட மாகாண ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும். யாழ். போதனா மருத்துவமனையின் தேவைகள் அதிகரித்துவரும் தற்போதைய சூழ்நிலையில் இந்தக் காணி அவசியமானது.
துரித நடவடிக்கை எடுத்து காணியை விடுவித்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அபிவிருத்திக்கு கைகொடுக்க வேண்டும் என சி. யமுனானந்தா தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
