யாழிலிருந்து ஆரம்பமானது விமான நிலையத்திற்கான போக்குவரத்து - அறிவிக்கப்பட்டது கட்டண விபரம்!

Jaffna Sri Lanka Transport Fares In Sri Lanka Jaffna International Airport
By Kalaimathy Dec 13, 2022 05:28 AM GMT
Report

யாழ்.நகரில் இருந்து பலாலி விமான நிலையத்திற்கு போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மீளவும் சேவைகளை ஆரம்பித்துள்ள நிலையிலேயே இந்த போக்குவரத்து சேவையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்-பலாலி இடையேயான போக்குவரத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தே தற்போது இயக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் பேருந்து சேவை

யாழிலிருந்து ஆரம்பமானது விமான நிலையத்திற்கான போக்குவரத்து - அறிவிக்கப்பட்டது கட்டண விபரம்! | Jaffna International Airport Palaly Ctb Bus Sl

திங்கள், செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய தினங்களில் சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்படும் விமானம், முற்பகல் 10.50 மணிக்கு பலாலி விமான நிலையத்தை வந்தடையும். பின்னர் பலாலி விமான நிலையத்திலிருந்து, 11.50 மணிக்கு சென்னை நோக்கிப் புறப்படும்.

இந்த விமான சேவை பயணிகளுக்காகவே யாழ்.நகர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திங்கள், செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய தினங்களில் காலை 8 மணிக்கு பலாலி விமான நிலையம் நோக்கி பேருந்து சேவை இடம்பெறும்.

கட்டண அறிவிப்பு

யாழிலிருந்து ஆரம்பமானது விமான நிலையத்திற்கான போக்குவரத்து - அறிவிக்கப்பட்டது கட்டண விபரம்! | Jaffna International Airport Palaly Ctb Bus Sl

அதேபோன்று நண்பகல் 12 மணிக்கு பலாலி விமான நிலையத்தில் இருந்து யாழ்.நகர் நோக்கி பேருந்து சேவை இடம்பெறும். தேவை ஏற்படின் ரயில் நிலையம் வரையிலும் சேவை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பயணிக்கும் பயணிகளுக்கான ஒரு வழிக் கட்டணமாக 500 ரூபா அறவிடப்படும். மேலும் பயணப் பொதி ஒன்றுக்கு 200 ரூபா அறவிடப்படும். இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு யாழ்.மாவட்ட பேருந்து நிலைய பொறுப்பதிகாரியின் 0765378432 என்ற இலக்கத்துக்கு தொடர்புகொள்ள முடியும் என வட மாகாண வீதிப் போக்குவரத்து அதிகார சபை தலைவர் அறிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015