மக்களை நல்வழிப்படுத்த வேண்டிய யாழ். மாநகர சபையே வீதியில் குப்பையை கொட்டும் அவலம்!

Jaffna Sri Lanka Sonnalum Kuttram
By Independent Writer Apr 04, 2025 10:23 AM GMT
Independent Writer

Independent Writer

in சமூகம்
Report

யாழ்ப்பாணம் (Jaffna) மாநகர சபையானது நடு வீதியில் குப்பைகளை கொட்டுவதால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை அனுபவிப்பதாக விசனம் வெளியிட்டுள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருகையில், மானிப்பாய் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட கல்லூண்டாய் பகுதியில் யாழ்ப்பாணம் மாநகர சபையின் கழிவுகள் சேகரிக்கும் இடம் உள்ளது. 

ஓட்டுமடத்தில் இருந்து வட்டுக்கோட்டை செல்லும் வீதியூடாகவே அந்த குப்பை சேகரிக்கும் இடத்திற்கு கழிவுப் பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன.

யாழ். மாநகர சபை

இவ்வாறு கழிவுப் பொருட்களை கொண்டு செல்லப்படும் போது மாநகர சபையின் வாகனங்கள் உரிய முறைகளை பின்பற்றுவதில்லை. 

பாதுகாப்பற்ற முறையில் கழிவுகளை திறந்தவாறு கொண்டு செல்வதால் அந்த கழிவுகள் வீதியில் கொட்டப்படுவதுடன், காற்றுடன் அந்த கழிவுப் பொருட்களின் தூசுகள் பறந்து வீதியில் செல்வோரது கண்களுக்குள் செல்வதானால் வாகனத்தை சரியாக செலுத்த முடியாத அபாயகரமான நிலைகளும் ஏற்படுகின்றன.

மக்களை நல்வழிப்படுத்த வேண்டிய யாழ். மாநகர சபையே வீதியில் குப்பையை கொட்டும் அவலம்! | Jaffna Municipal Council Dumping Garbage On Road

இது இவ்வாறு இருக்கையில் இன்றையதினம் (04) காக்கைதீவு சந்தையில் இருந்து வட்டுக்கோட்டை செல்லும் பக்கமாக அண்ணளவாக 200 மீட்டர்கள் தொலைவில் நடு வீதியில் ஏராளமான கழிவுகள் கொட்டப்பட்டு காணப்படுகின்றன. 

இந்த கழிவுகளானது மாநகர சபையின் கழிவு பொருட்களை ஏற்றும் வாகனத்தில் இருந்து கொட்டப்பட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது.

மக்களை நல்வழிப்படுத்த வேண்டிய யாழ். மாநகர சபையே வீதியில் குப்பையை கொட்டும் அவலம்! | Jaffna Municipal Council Dumping Garbage On Road

இந்த வீதியானது 784, 785 மற்றும் 789 ஆகிய வழித்தட பேருந்துகள் யாழ்ப்பாணத்தில் இருந்து காரைநகர் மற்றும் சித்தங்கேணி நோக்கி பயணிக்கும் பிரதான வீதியாக காணப்படுகிறது. 

இவ்வாறு கழிவுகள் கொட்டப்பட்டு உள்ளமையால் மக்கள் மிகுந்த இன்னல்களை எதிர்கொண்டவாறு பயணத்தை மேற்கொள்கின்றனர்.

இது குறித்து மானிப்பாய் பிரதேச சபையின் செயலாளரை தொடர்புகொண்டு வினவிய வேளை, குறித்த வீதியில் யாழ். மாநகர சபையினர் கழிவுகளை கொட்டி இருக்கலாம் எனவும், அவர்கள் இன்று நேற்றல்ல தொடர்ச்சியாக இவ்வாறு வீதியில் கழிவுகளை கொட்டி செல்வதாகவும், தாங்கள் இது குறித்து தெரியப்படுத்தியும் அவர்கள் அதனை சீர் செய்வதாக தெரியவில்லை என கூறினார்.

மக்களை நல்வழிப்படுத்த வேண்டிய யாழ். மாநகர சபையே வீதியில் குப்பையை கொட்டும் அவலம்! | Jaffna Municipal Council Dumping Garbage On Road

உள்ளூராட்சி சபைகள் என்பன கிராமங்களையும், நகரங்களையும் அபிவிருத்தி செய்வதையும், தூய்மையை பேணுவதையுமே பிரதான நோக்கமாக கொண்டு காணப்படுகிறன.

இவ்வாறு இருக்கின்ற நிலையில் மக்களை நல்வழிப்படுத்த வேண்டிய யாழ். மாநகர சபையே இவ்வாறு வீதிகளில் குப்பைகளை கொட்டும்போது இவர்கள் ஏனைய விடயங்களில் எவ்வாறு சரியாக நடந்து கொள்வார்கள் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுகின்றது.

   செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Scarborough, Canada

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, கோப்பாய், Markham, Canada

01 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
மரண அறிவித்தல்

கொழும்பு, Warwick, England, United Kingdom

03 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சென்னை, India

08 Sep, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bad Bergzabern, Germany

06 Sep, 2024
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம்

08 Sep, 1995
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொழும்பு 13

04 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023