யாழ். மாநகரசபை ஊழியர்களின் அசமந்தம்: சபையில் போட்டுடைத்த உறுப்பினர்
ஆக்கபூர்வமான தீர்மானங்கள் எவையும் நடைமுறைப்படுத்தப்படாமை ஊழியர்களின் அர்ப்பணிப்பின்மையை வெளிப்படுத்துகின்றது. இந்த அசமந்தப்போக்கால் மாநகரசபை இடர்களைச் சந்திக்கின்றது என்று மாநகரசபை உறுப்பினர் மயூரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
யாழ். மாநகரசபை அமர்வு நேற்று (18.12.2025) இடம்பெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ஆக்கபூர்வமான பல தீர்மானங்கள் எடுக்கப்பட்ட போதும் எவையும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
பொலித்தீன் பாவனைத் தடை
பொலித்தீன் பாவனைத் தடை, களியாட்ட நிகழ்வு ஒழுங்குபடுத்தல், சுகாதார நடைமுறை போன்று பல விடயங்கள் தொடர்பில் ஆறு மாதங்களாக காத்திரமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டபோதும் எவையும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

ஊழியர்கள் பலர் முழுநேரப்பணி செய்வதில்லை. மாநகரசபை உறுப்பினர்களின் உச்சகட்டப் பணி என்ன என்பது தெரிந்தாகவேண்டும்.
சிறந்த சுகாதாரம் மிக்க மாநகரசபையாக வளர்வதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.
எனவே எதிர்வரும் ஆண்டிலிருந்து தண்டப்பணம் அறவிடுதல், சுகாதாரநடை முறைகள் என்பவற்றை இறுக்கமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அங்கீகரிக்கப்படாத தேசத்தின் அங்கீகரிக்கப்பட்ட இராஜதந்திரி
4 நாட்கள் முன்