நெடுந்தீவு கடற்படை முகாமிற்கு அருகில் ஒரே நேரத்தில் ஐவர் கொடூரப் படுகொலை!
நெடுந்தீவில் 5 நபர்கள் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெடுந்தீவு இறங்கு துறை மற்றும் கடற்படை முகாம் என்பவற்றிற்கு அருகில் உள்ள வீடு ஒன்றிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை ஒருவர் வெட்டக்காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் நெடுந்தீவு கிராம சேவகரிடம் வினவிய போது, அவரும் சம்பவம் இடம்பெற்றது உண்மையென உறுதிப்படுத்தியுள்ளார்.
இன்று காலையிலேயே சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன எனவும் சம்பவ இடத்தில் கடமையில் இருக்கும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
யாழ்ப்பாணம் நெடுந்தீவு 12ஆம் வட்டாரம் j/06 கிராம சேவகர் பிரிவில், மாவிலி துறைமுகம் பகுதியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படுகொலை
இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர்களில் 3 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் எனவும், 1 நபர் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலதிக தகவல்கள் எவையும் இது வரை வெளியாகவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படுகொலை குழுவாகவோ அல்லது தனி நபரால் மேற்கொள்ளப்பட்டதா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த இடத்தில் கடற்படையினரும் காவல்துறையினரும் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
