தமிழர் பிரதேசத்தை புரட்டிப் போட்ட கொடூர கொலை - நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
Sri Lanka Police
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Kiruththikan
யாழ்ப்பாணம் - நெடுந்தீவில் இடம்பெற்ற 6 பேரின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
அறுவரின் கொலை தொடர்பான வழக்கு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (06) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது. இதன்போது, மூவரிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.
இந்த நிலையில், சந்தேகநபரை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் கஜநிதிபாலன் உத்தரவிட்டடார். அதுவரை வழக்கும் அன்றைய தினத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
வெட்டி கொலை
கடந்த ஏப்ரல் 22 ஆம் திகதி அதிகாலை நெடுந்தீவில் 5 பேர் வெட்டி கொலை செய்யப்பட்டனர்.
சம்பவத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 101 வயது மூதாட்டியும் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர்களில் 4 பெண்களும் 2 ஆண்களும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்