நகர அபிவிருத்தி அதிகார சபை கைவசமாகும் யாழின் புராதன பகுதிகள்! கைவிடப்பட்ட அளவீட்டு பணிகள் (படங்கள்)
புதிய இணைப்பு
யாழ்ப்பாணம் - கீரிமலை அதிபர் மாளிகை அமைந்துள்ள பகுதியை நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் கையளிக்கும் நோக்கில் இன்றையதினம் அளவீடுகள் செய்வதற்கு நில அளவை திணைக்களம் வருகை தந்தது.
இந்நிலையில் குறித்த காணி அளவீட்டுக்கு அப்பகுதி மக்கள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டனர்.
அத்துடன் காணியினை வழங்க முடியாது என கடிதம் எழுதி கையொப்பமிட்டு வழங்கினர்.
இந்நிலையில் நில அளவை திணைக்களம் அங்கிருந்து திரும்பிச் சென்றது.
முதலாம் இணைப்பு
யாழ்ப்பாணம் - கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியை நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் கையளிக்கும் நோக்கில் இன்றைய தினம்(15) அளவீடு செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நில அளவைத் திணைக்களத்தின் நில அளவையாளரால் இந்த பகிரங்க அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இன்று முதல் ஆரம்பம்
இதற்கமைய தெல்லிப்பளை பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள நகுலேஸ்வரம் (ஜே/226), காங்கேசன்துறை (ஜே/233) கிராம சேவகர் பிரிவுகளில் 12.0399 கெக்டேயர்( 29 ஏக்கர்) நிலம் அளவீடு செய்யப்படவுள்ளது.
ஆழ்வான்மலையடி, வேலர்காடு, புண்ணன்புதுக்காடு, பத்திராயான் மற்றும் புதுக்காடு, சோலைசேனாதிராயன் என அழைக்கப்படும் பகுதிகளிலேயே இந்த நில அளவீடு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதோடு இன்று முதல் தொடர்ச்சியாக அளவீடு இடம்பெறும் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.