உடனடியாக விரைந்த திடீர் மரண விசாரணை அதிகாரி - யாழ் பண்ணைக் கடலிலிருந்து மீட்கப்பட்டது பெண்ணின் சடலம்!

Sri Lanka Police Jaffna Sri Lanka Sri Lanka Police Investigation
By Kalaimathy Feb 09, 2023 01:08 PM GMT
Kalaimathy

Kalaimathy

in சமூகம்
Report

இரண்டாம் இணைப்பு

யாழ் பண்ணைக் கடலில் சடலமாக மிதந்த பெண், தற்போது கடலில் இருந்து மீட்கப்பட்டு கரைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், 203/10, ஆசீர்வாதம் வீதி, யாழ்ப்பாணம் என்னும் முகவரியைக்கொண்ட, 70 வயதுடைய, ஞானசேகரம் மேரி சரோஜா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி குறித்த பகுதிக்கு சென்றதையடுத்து, சடலம் மீட்கப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதேவேளை தனது தாயாரைக் காணவில்லை எனத் தெரிவித்து சம்பவ இடத்திற்கு வந்திருந்த நபர் சடலமாக மீட்கப்பட்ட பெண் தனது தாயார் தான் என அடையாளம் காட்டியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலம் மீட்கப்பட்டு உடல் கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

முதலாம் இணைப்பு

பண்ணை கடலில் பெண் ஒருவரின் சடலம் மிதந்துகொண்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சற்று முன்னரே சடலம் மிதந்துகொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், சடலம் கவிழ்ந்து இருப்பதால் யார் என அடையாளம் காண முடியாதுள்ளதாகவும் தோற்றத்தைப் பார்க்கும் போது சற்று வயதானவராகவே இருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் உள்ள பண்ணைக் கடற்பரப்பில் பெண் ஒருவரின் சடலம் மிதந்துகொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடலில் மிதக்கும் சடலம்

உடனடியாக விரைந்த திடீர் மரண விசாரணை அதிகாரி - யாழ் பண்ணைக் கடலிலிருந்து மீட்கப்பட்டது பெண்ணின் சடலம்! | Jaffna Pannai Beach Death Boday Police Northern

இன்று மாலை 5 மணியளவில் இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான காவல்துறையின் ஆரம்பக்கட்ட விசாரணையில், குறித்த பெண்ணின் உடல் வேறு ஏதேனும் பிரதேசத்தில் இருந்து மிதந்து வருவதற்கு வாய்ப்பு இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலையா 

உடனடியாக விரைந்த திடீர் மரண விசாரணை அதிகாரி - யாழ் பண்ணைக் கடலிலிருந்து மீட்கப்பட்டது பெண்ணின் சடலம்! | Jaffna Pannai Beach Death Boday Police Northern

ஏனெனில் உடல் மிதக்கும் பகுதியை சுற்றி வலைகள் காணப்படுவதால் வேறு பகுதியில் இருந்த உடல் மிதந்த வந்தாலும் வலையில் சிக்கியிருக்கும் எனவும் குறித்த பகுதிக்குள் வருவதற்கு வாய்ப்பு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீவிர விசாரணை

உடனடியாக விரைந்த திடீர் மரண விசாரணை அதிகாரி - யாழ் பண்ணைக் கடலிலிருந்து மீட்கப்பட்டது பெண்ணின் சடலம்! | Jaffna Pannai Beach Death Boday Police Northern

ஆகவே அந்த பெண் தானாகவே கடலில் குதித்து தற்கொலை செய்துகொண்டாரா அல்லது யாராவது கொலை செய்து கடலில் வீசியுள்ளார்களா என்பது தொடர்பில் தற்போது யாழ்ப்பாண காவல்துறையினர் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, குறித்த கடற்கரைப் பகுதிக்கு வந்த நபர் ஒருவர், தனது தாயாரைக் காணவில்லையென காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். எனினும் நீதவான் மற்றும் திடீர் மரண விசாரணை அதிகாரி ஆகியோர் குறித்த பகுதிக்கு வரும் வரை சடலம் மீட்கப்பட முடியாது என்பதால் அடையாளம் காண்பதற்காக காவல்துறையினர் கத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலதிக தகவல்கள் எவையும் இதுவரை வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Scarborough, Canada

23 Aug, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், London, United Kingdom

28 Aug, 2010
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், உரும்பிராய், கொழும்பு, India, England, United Kingdom

02 Aug, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, பண்டத்தரிப்பு, கொழும்பு சொய்சாபுரம், London, United Kingdom, Borehamwood, United Kingdom

17 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, ஆனைப்பந்தி, Pickering, Canada

25 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொக்குவில்

05 Sep, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018