யாழில் இடம்பெற்ற கிறிஸ்துமஸ் விழா
Christmas
Jaffna
Sri Lanka
By Raghav
யாழ் (Jaffna) காவல்துறையினரின் ஏற்பாட்டில் கிறிஸ்துமஸ் விசேட நிகழ்ச்சி ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது நேற்றைய தினம் (21.12.2024) தந்தை செல்வா கலையரங்கில் நடைபெற்றுள்ளது.
கிறிஸ்துமஸ்
நிகழ்வில் யாழ்ப்பாண மறை மாவட்ட ஆயர் யஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம், வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி சூசைதாசன், வடமாகாண பிரதிப் காவல்துறை மா அதிபர் தனபால, யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் காவல்துறை மா அதிபர் காளிங்க ஜெயசிங்க, காவல்துறை உயர் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
எதிர்வரும் 25ஆம் திகதி உலகளவில் கிறிஸ்துமஸ் கொண்டாடப்படவுள்ள நிலையில் இலங்கையிலும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்