யாழ் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் முன்னெடுக்கப்படும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்..!
யாழ்ப்பாணம்
நாடு தழுவிய ரீதியில் வரி சீர்திருத்தத்தை உடனடியாக நிறுத்த கோரி முன்னெடுக்கப்படும் வேலைநிறுத்த போராட்டத்திற்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்பாக குறித்த போராட்டம் இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்றது.
குறித்த போராட்டத்தில் வங்கி ஊழியர் சங்கம், அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்,மின்சார சபை பொறியியலாளர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் பங்கேற்று ஆதரவு வழங்கின.

இதேவேளை தமது கோரிக்கைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிடின், தொழிற்சங்க ரீதியாக கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என போராட்டகாரர்கள் தெரிவித்தனர்.
புத்தளம்

நியாயமற்ற வரிக்கொள்கை, மருந்துகள் தட்டுப்பாடு மற்றும் பல விடயங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து புத்தளம் மாவட்டத்திலும் வைத்தியர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் வெளிநொயாளர் பிரிவு இயங்காமையால் வெரிச்சோடிய நிலையில் காணப்பட்டுள்ளது.
மேலும் தூர இடங்களில் இருந்து வருகைத் தந்த நோயாளிகளும் அசௌகரியங்களுக்குள்ளாகிய நிலையில் திரும்பிச் சென்றுள்ளது.
மலையகம்

அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மலையகப்பகுதிகளில் ஆசிரியர்கள் உட்பட அரச தரப்பினர் அனைவரும் கருப்பு ஆடை அணிந்து எதிர்ப்பில் ஈடுபட்டனர்.
அந்தவகையில் மலையக பகுதயில் உள்ள அரச நிரவனங்களின் உத்தியோகத்தர்கள்
பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளமையால் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை
எதிர் நோக்கியுள்ளமை குறிப்பிடதக்கது.