யாழில் தனிமையிலிருந்த மூதாட்டி சடலமாக மீட்பு -கொலையா..!
Jaffna
Sri Lanka Police Investigation
By Jaso
யாழ்.தென்மராட்சி மட்டுவில் வடக்கு பகுதியிலுள்ள வீட்டில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
சடலம் இன்று காலையில் மீட்கப்பட்டதாக சாவகச்சேரி காவல்துறையினர் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் 82 வயதுடைய தம்பையா சரோஜினி என்ற மூதாட்டி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலை செய்யப்பட்டிருக்கலாம்

மூதாட்டி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை சாவகச்சேரி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்