மகனுடன் முற்றிய முரண்பாடு : யாழில் தாயொருவரின் விபரீத முடிவு
யாழில் (jaffn) தாய் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
கோப்பாய் தெற்கு, கோப்பாய் பகுதியைச் சேர்ந்த தங்கராசா கோதைநாயகி (வயது 82) என்ற நான்கு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கணவன் இறந்த பின்னர் குறித்த மூதாட்டி தனியாக வசித்து வந்துள்ளார்.
தவறான முடிவு
மகன் ஒருவர் தினமும் பின்னேரம் தாயின் வீட்டுக்கு சென்று தங்கிவிட்டு காலையில் தனது வீடு செல்வது வழமை.
இந்நிலையில், கடந்த 20 ஆம் திகதி மகனுக்கும் அவருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
மரண விசாரணை
இதனால் மனவிரக்தியடைந்த அவர், தவறான முடிவெடுத்து தனக்கு தானே தீ மூட்டியுள்ளார்.
இதையடுத்து, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
2 வாரங்கள் முன்