நியூயோர்க் மக்களை திரும்பி பார்க்க வைத்த யாழ்ப்பாண தமிழர்..! பின்னணியில் உள்ள சுவாரஸ்யம்
நியூயோர்க்கில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழர் ஒருவரின் தோசைக்கடை அந்நாட்டு மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை தமிழரான திருக்குமார் கந்தசாமியின் தோசைக்கடையே இவ்வாறு பிரபலமடைந்துள்ளது.
அதுமட்டுமன்றி 2007ஆம் ஆண்டில், சிறந்த தெரு உணவு விற்பனையாளருக்கான நியூயோர்க்கின் வருடாந்த போட்டியின் வெண்டி விருதை திருக்குமார் கந்தசாமி வென்றுள்ளார்.
மேலும், திருக்குமார் கந்தசாமியின் தோசைக்கடை குறித்த விபரங்கள் 42 புத்தகங்களில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கந்தசாமியின் தோசை கடை
நியூயோர்க் இரட்டைக் கோபுரம் அருகே கிறிஸ்டோபர் தெருவில் திருக்குமார் கந்தசாமியின் தோசை கடை காணப்படுவதாகவும் இவரின் கடையில் விதம் விதமான தோசைகள் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தோசையுடன் சாப்பிடுவதற்கு தேவையான சட்னி, சாம்பார், இட்லி பொடி என அனைத்தையும் வீட்டில் இவரே தயாரித்து எடுத்துவருவதால் சுவையும் அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் இடமென்பதால் இவருக்கு எல்லா நாடுகளிலிருந்தும் பாராட்டுகள் கிடைக்கப்பெற்றுள்ளது.
