வெள்ளத்தில் மூழ்கிய யாழ். போதனா வைத்தியசாலை: பணிப்பாளர் சத்தியமூர்த்தியின் அறிவிப்பு

IBC Tamil Jaffna Sri Lanka Jaffna Teaching Hospital
By Raghav Nov 28, 2024 06:21 AM GMT
Report

சீரற்ற காலநிலையினால் யாழ்ப்பாணம் (Jaffna) நீரில் மூழ்கியுள்ள நிலையிலும், யாழ். போதனா வைத்தியசாலை (Teaching Hospital Jaffna) முழுமையான சேவையை வழங்குவதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி (Thangamuthu Sathyamoorthy) தெரிவித்துள்ளார்.

சீரற்ற காலநிலை மற்றும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் நிலைமைகள் குறித்து ஐபிசி தமிழ் ஊடகம் அவரிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், "தொடர்ந்து மழை பெய்து கொண்டிருப்பதால், சாதாரண வைத்திய சேவைகளை வழங்குவதில் சிக்கல்கள் இருக்கக்கூடும் என அறிவித்திருந்தோம்.

வெள்ளத்தில் கவிழ்ந்த உழவு இயந்திரம் - தொடர்ந்து சடலங்களாக மீட்க்கப்படும் மாணவர்கள்

வெள்ளத்தில் கவிழ்ந்த உழவு இயந்திரம் - தொடர்ந்து சடலங்களாக மீட்க்கப்படும் மாணவர்கள்

மக்களுக்கான சேவை

இருப்பினும் பெரும்பாலான ஊழியர்கள் மக்களுக்கான சேவைகளை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் கடமைக்கு வந்துள்ளார்கள். ஆகையால் அனைத்து சேவைகளும் வழமை போல நடைபெறுகின்றன.

வெள்ளத்தில் மூழ்கிய யாழ். போதனா வைத்தியசாலை: பணிப்பாளர் சத்தியமூர்த்தியின் அறிவிப்பு | Jaffna Teaching Hospital Begins Full Service

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சில விடுதிகளுக்கும் வெள்ளம் புகுந்துள்ளது. அந்த வெள்ளத்தை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றோம்.

அனர்த்தம் காரணமாக விபத்துக்களால் பாதிக்கப்பட்ட அல்லது தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் இனிமேல்தான் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளத்தில் கவிழ்ந்த உழவு இயந்திரம் - தொடர்ந்து சடலங்களாக மீட்க்கப்படும் மாணவர்கள்

வெள்ளத்தில் கவிழ்ந்த உழவு இயந்திரம் - தொடர்ந்து சடலங்களாக மீட்க்கப்படும் மாணவர்கள்

தேவையான சிகிச்சை

அத்துடன் எதிர்காலத்தில் டெங்கு தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களும் வைத்தியசாலைக்கு வருகை தரக்கூடும் என எதிர்பார்க்கின்றோம். ஆகையால் அவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை வழங்குவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம்.

வெள்ளத்தில் மூழ்கிய யாழ். போதனா வைத்தியசாலை: பணிப்பாளர் சத்தியமூர்த்தியின் அறிவிப்பு | Jaffna Teaching Hospital Begins Full Service

வைத்தியசாலை ஊழியர்களின் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து அவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர்களது வரவு குறைவாக இருக்கும் என்ற அடிப்படையில் தியேட்டர்களின் சேவைகள் அல்லது சத்திரசிகிச்சைகள் இடம்பெறாது என அறிவித்திருந்தோம்.

இருப்பினும் அவர்கள் கடமைகளுக்கு வந்துள்ளதால் சேவைகள் அனைத்தும் வழமைபோல இடம்பெறும். பிரதான சத்திர சிகிச்சை கூடத்தில் எட்டு சத்திர சிகிச்சை பிரிவுகள் உள்ளன. அந்த அனைத்து பிரிவுகளிலும் வழமை போல சத்திர சிகிச்சைகள் இடம்பெறுகின்றன. எனவே மக்கள் வழமை போல சேவைகளை பெற்றுக் கொள்ளலாம்" என தெரிவித்துள்ளார்.

மேலதிக செய்திகள் : பு.கஜிந்தன்

இடியுடன் கூடிய மழை: மக்களுக்கு வெளியான அறிவிப்பு

இடியுடன் கூடிய மழை: மக்களுக்கு வெளியான அறிவிப்பு

யாழில் வெள்ள அனர்த்தம் - அமைச்சர் தலைமையில் அவசர கூட்டம்

யாழில் வெள்ள அனர்த்தம் - அமைச்சர் தலைமையில் அவசர கூட்டம்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


GalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, பரிஸ், France

13 Mar, 2006
மரண அறிவித்தல்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, இடைக்குறிச்சி

25 Feb, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், London, United Kingdom

27 Jan, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025