திருப்தியளிக்காத யாழ் பாரம்பரிய உணவுத் திருவிழா..!
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தினால் முற்றவெளி மைதானத்தில் இரண்டு நாட்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட யாழ்ப்பாண பாரம்பரிய உணவுத் திருவிழா இன்றுடன் நிறைவுக்கு வருகின்றது.
யாழ்ப்பாணப் பாரம்பரிய உணவுத் திருவிழா என்று பெயரில் குறித்த திருவிழா நடத்தப்பட்டிருந்த நிலையில், பாரம்பரியமான உணவுகள் சிலவற்றை மாத்திரமே அங்கு காணக்ககூடியதாக இருந்தது.
அத்துடன் உணவுப் பொருட்கள் விலைக்கு விற்கப்பட்டு வர்த்தக சந்தைப் போன்று நடத்தப்பட்டிருந்தததாக அங்கு சென்றிருந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.
யாழ்ப்பாணத்தில் உள்ள பாரம்பரிய உணவு வகைகளை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தவும் உள்ளூர் முயற்சியாளர்களை ஊக்குவிக்கவும் உணவு திருவிழாவில் நடத்தப்படுவதாக மாவட்ட அரசாங்க அதிபர் சிவபாலசுந்தரன் தெரிவித்திருந்தார்.
எனினும் அங்கு வியாபார நோக்குடன் பலவித உணவுப்பொருட்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தமை அங்கு சென்றிருந்த மக்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மாவட்ட செயலாளர் சிவபாலசுந்தரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.
நேற்று ஆரம்பமான இந்த உணவு திருவிழா இன்று இரவு 9 மணியுடன் நிறைவடையவுள்ளது.
குறித்த சந்தர்ப்பத்தில் பாரம்பரிய இசை நிகழ்வும் இடம்பெற்றதுடன், இசை நிகழ்வில் பங்கேற்ற கலைஞர்களை கௌரவித்து அமைச்சர் சான்றிதழ்களை வழங்கிவைத்தார்.
