யாழ் பல்கலையில் கறுப்பு ஜூலை நினைவேந்தல் - பல்கலைக்கழகத்திற்குள் புகுந்த காவல்துறையினர்! (படங்கள்)

Sri Lanka Police University of Jaffna
By Pavan Jul 23, 2022 09:47 AM GMT
Report

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் இன்றைய தினம் (23) காலை கறுப்பு ஜூலை நினைவுதினம் உணர்வுபூர்வமாக நினைவு கூரப்பட்டுள்ளது.

இதன் போது பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலின் அருகே அமைந்துள்ள பிரதான கொடிக்கம்பத்தில் கறுப்பு கொடியேற்றப்பட்டு அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.

இதனையடுத்து பல்கலைக்கழக பிரதான தூபி வளாகத்தில் கறுப்பு ஜூலை நினைவுருவ படத்திற்கு மாணவர்களால் ஈகைச் சுடரேற்றப்பட்டதோடு, மலரஞ்சலியுடன் அகவணக்கம் செலுத்தப்பட்டது.

மேலும் 1983 கறுப்பு ஜூலை வாரத்தில் தமிழிர்களுக்கு இழைக்கபட்ட அநீதிகள் தொடர்பான நினைவுரையும் இடம்பெற்றது.

மேலும் 39வருடங்களின் முன் இடம்பெற்ற இனச்சுத்திகரிப்பு, திட்டமிடப்பட்ட தமிழர்கள் மீதான வன்முறைகளின் போது பாதிக்கப்பட்ட உயிர்நீத்த உறவுகளுக்கான நீதி இதுவரை கிடைக்கப்பெறவில்லை, தற்காலத்திலும் தமிழர்கள் மீதான அடக்குமுறை இடம்பெற்றே செல்கிறது.

ஒடுக்குமுறைகள் ஒழிக்கப்பட வேண்டும் என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் வலியுறுத்தப்பட்டது.

காவல்துறையினரின் அச்சுறுத்தல்

யாழ் பல்கலையில் கறுப்பு ஜூலை நினைவேந்தல் - பல்கலைக்கழகத்திற்குள் புகுந்த காவல்துறையினர்! (படங்கள்) | Jaffna University Black July Remembering

இந்நிலையில் யாழ் பல்கலையில் நினைவேந்தல் நிறைவுபெறும் தருணத்தில் இரண்டு காவல்துறையினர் மோட்டார் வாகனத்தில் பிரதானவாயிலருகே உள்நுழைந்து மாணவர்களை அச்சுறுத்தும் முகமாக நின்றனர்.

இதனையடுத்து யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் விஜயகுமார், எதற்காக பல்கலைக்கழகத்திற்குள் காவல்துறையினர் நுழைந்தனர் என பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர்களிடம் வினவியபொழுது நீங்கள் பல்கலைக்கழகத்தின் எந்த பகுதியிலும் கொடியேற்றுங்கள் பிரதான கொடிக்கம்பத்தில் ஏற்ற வேண்டாம் கறுப்பு கொடியை கம்பத்தில் இருந்து அகற்றுங்கள் என தெரிவிக்கப்பட்ட நிலையில் மாணவர்களால் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து இரு காவல்துறையினரும் வெளியேறிய நிலையில் மேலதிகமாக பல்கலைக்கழகத்திற்கு வெளியே காவல்துறையினர் குவிக்கப்பட்டு அரைக்கம்பத்தில் பறந்த கறுப்பு கொடியினை காணொளி எடுத்த நிலையில் சிறிது நேரத்தில் அவ்விடத்தை விட்டு அகன்று சென்றனர்.

மீண்டும் ஒடுக்குமுறை

யாழ் பல்கலையில் கறுப்பு ஜூலை நினைவேந்தல் - பல்கலைக்கழகத்திற்குள் புகுந்த காவல்துறையினர்! (படங்கள்) | Jaffna University Black July Remembering

இதனையடுத்து கருத்து தெரிவித்த யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் அழகராசா விஜயகுமார்,

அடக்குமுறைகளின் உச்சத்தை தொட்ட இன்றைய கறுப்பு ஜூலை நினைவு தினத்தில் கூட காவல்துறையினரின் செயற்பாடு மீண்டும் ஒடுக்குமுறையை  எடுத்துகாட்டுகின்றது.

பல்கலைக்கழகத்தற்குள் காவல்துறையினர் மாணவர்களை அச்சுறுத்தும் முகமாக நுழைந்தமைக்கு எமது கடுமையான கண்டனத்தை தெரிவிக்கின்றோம் எனவும் பல்கலை மாணவர்களின் சுதந்திரம் பேணப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.  

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011