மறைந்த யாழ். பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருக்கு சிவப்பு மஞ்சள் கொடி போர்த்தப்பட்டு கௌரவம் (படங்கள்)
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும் பேராசிரியருமான ரட்ணம் விக்னேஸ்வரனின் இறுதிக் கிரியைகள் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளன.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும் கணிதத்துறை பேராசிரியருமான ரட்ணம் விக்னேஸ்வரன் கடந்த 17ஆம் திகதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
இறுதி அஞ்சலி
இன்றைய தினம் அவரது செந்த ஊரான இணுவிலில் இறுதிக் கிரியைகள் இடம்பெற்று, மதியம் 11.30 மணியளவில் யாழ்.பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இதன் போது அவருடைய நினைவுப்பேருரைகளும் இடம்பெற்றன.
அத்துடன், யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளால் சிவப்பு மஞ்சள் கொடி போர்த்தப்பட்டு கௌரவம் வழங்கப்பட்டது.
அஞ்சலி நிகழ்வில் துணைவேந்தர், பேராசிரியர்கள், துறைத்தலைவர்கள், விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள், மாணவர்கள் , அரசியல் பிரமுகர்கள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு அஞ்சலிகளை செலுத்தினார்கள்.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)