சிறிலங்கா இராணுவ அடக்கு முறைக்கு எதிரான மக்கள் பேரெழுச்சியின் பொங்கு தமிழ் பிரகடனம்!
யாழ்.பல்கலைக்கழகத்தின் பொங்கு தமிழ் பிரகடனத்தின் 22 ஆம் ஆண்டு நிறைவு நாள் இன்று செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர், மாணவர்கள், இணைந்து பல்கலைக்கழக கலைப்பீட வளாகத்திற்குள் அமைந்துள்ள பொங்குதமிழ் நினைவு தூபி முன் கூடி பொங்குதமிழ் பிரகடன நிறைவு நாளை நினைவு கூர்ந்திருந்தனர்.
இதன் போது, யாழ். பல்கலைக்கழகத்தில் தொடர்ந்தும் மேற்கொண்டு வந்த தமிழ் தேசிய நிலைப்பாடு தற்போது அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளதாக மாணவர் ஒன்றியம் கூறியுள்ளது.
பொங்கு தமிழ் பிரகடனம்
இந்த நாளில், பொங்குதமிழ் பிரகடனம் வாசிக்கப்பட்டது. இவ் எழுச்சி நிகழ்வில் வைத்து தமிழ் மக்களின் அபிலாசைகளான சுயநிர்ணைய உரிமை, மரபுவழித்தாயகம், தமிழ் தேசியம் என்பவை அங்கிகரிக்கப்பட வேண்டும் என்பவை பொங்குதமிழ் பிரகடனமாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது.
யாழ்.பல்கலைக்கழகத்தில் மக்கள் பேர் எழுச்சியாக திரண்ட பொங்கு தமிழ்ப் பிரகடனத்தின் 22 ஆம் ஆண்டு நிறைவு நாள் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் இரண்டு நிமிட மௌன அஞ்சலியுடன் மலரஞ்சலி இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் வெளியிடப்பட்டுள்ள பொங்கு தமிழ் நினைவு நாள் அறிக்கையும் இதன்போது வாசித்துக் காட்டப்பட்டது.
மக்கள் பேரெழுச்சி
தமிழ் மக்களின் அபிலாசைகளான சுயநிர்ணய உரிமை, மரபுவழித் தாயகம் மற்றும் தமிழ்த் தேசியம் என்பன அங்கீகரிக்கட வேண்டும் என கோரிக்கைகளை வலியுறுத்தி 2001 ஆண்டு ஜனவரி மாதம் 17 ஆம் திகதி இராணுவ அடக்குமுறைக்கு மத்தியில் யாழ் பல்கலைக்கழகத்தில் மக்கள் பேர்எழுச்சியாக திரண்டிருந்தனர்.
இதனை நினைவுபடுத்தும் முகமாக அப்போதய யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் நினைவுத் தூபியும் திறந்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.