உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்த யாழ் பல்கலை மாணவர்கள்!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக (University of Jaffna) மாணவர்கள் இன்று (24.01.2025) காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மாணவர்கள் மீதான பழிவாங்குதல்களை உடன் நிறுத்துமாறு வலியுறுத்தி பல்கலைக்கழக முன்றலில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
இந்த நிலையில் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் பின்வரும் நான்கு அம்சக் கோரிக்கைகளை முன்னிறுத்தியுள்ளனர்.
தீர்வு கிடைக்கும் வரை போராட்டம்
1. விதிகளுக்குப் புறம்பாக நடைபெறும், நடைபெற்ற மாணவர்கள் மீதான விசாரணைகளை உடன் நிறுத்து.
2. போராடுதல், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் உள்ளிட்ட மாணவர்களின் அடிப்படை உரிமைகளை உறுதி செய்.
3. விரிவுரையாளர்கள் மீதான முறைகேடுகளையும் பாரபட்சமின்றி விசாரணை செய்.
4. மாணவர்களின் கற்றலுக்கான சுதந்திரத்தை உறுதி செய்து மாணவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கு.
மேற்குறிப்பிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தீர்வு கிடைக்கும் வரை உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகள் - கஜிந்தன்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |