யாழில் கார் ஒன்று தடம்புரண்டதில் மூவர் படுகாயம்...!
யாழில் விபத்தில் சிக்கி மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த சம்பவம் அச்சுவேலி வல்லைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணத்திலிருந்து மந்திகை நோக்கி பயணித்த கார் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
மேலதிக விசாரணை
இந்தநிலையில், அச்சுவேலி வல்லைப் பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார் அருகில் இருந்த பாலத்திலுள் தடம் புரண்டுள்ளது.
இதன் போது கார் சேற்றில் புதைந்த நிலையில் அதில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

திருநெல்வேலி ஆடியபாதம் வீதியைச் சேர்ந்த தாயும் தந்தையும் மற்றும் மகளும் பயணித்த நிலையில் மகளின் கால்கள் முறிவடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த மூவரும் மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அச்சுவேலி காவல்துறையினர் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |