யாழில் அதிகாலையில் இடம்பெற்ற பயங்கரம் - ஆயுதங்களுடன் வீட்டிற்குள் புகுந்த நபர்கள்!
Sri Lanka Police
Jaffna
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Kalaimathy
வல்வெட்டித்துறையில் முதியவர் மீது சரமாரியான வாள் வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த வாள் வெட்டு சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை நாவலடி ஊரிக்காடு பகுதியில் இன்று அதிகாலை 2 மணியளவில் வாள் மற்றும் கோடாரியுடன் வீடு ஒன்றிற்குள் புகுந்த இரண்டு நபர்கள் 65 வயது மதிக்கத்தக்க வயோதிபரை தாக்கியுள்ளனர்.
படுகாயம்
இந்த வாள் வெட்டு சம்பவத்தில் படுகாயமடைந்த வயோதிபர் ஊரணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலை மேற்கொண்டவர்களில் ஒருவர் அயலவர்களினால் பிடிக்கப்பட்டு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணையை வல்வெட்டித்துறை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.




