யாழில் நேற்றைய தினம் போராட்டத்தைக் குழப்பியவர்கள் தொடர்பில் வெளிவந்த தகவல்!
jaffna
people
struggle
By Thavathevan
யாழில் ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டம் ஒன்று நேற்றைய தினம் (01) இடம்பெற்றது.
பிலியந்தலை பகுதியை சேர்ந்த இருவரே யாழில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போராட்டம் இடம்பெற்றவேளை தேசியக் கொடியுடன் வந்த மூவர் போராட்டக்காரர்களுடன் முரண்பட்டனர். அதில் ஒருவர் தனது கையடக்க தொலைபேசியில் காணொளி பதிவினை மேற்கொண்டவாறே போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் முரண்பட்டார்.
குறித்த மூவரில் ஒருவர் தற்போது யாழில் வசித்து வரும் நிலையில் மற்றைய இருவரும் பிலியந்தல பகுதியை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
இலங்கையின் சுதந்திர தினத்தினை வடக்கில் கறுப்பு தினமாக அனுஷ்டிக்கப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.








5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி