ஜப்பான் நிலநடுக்கம் 2024 : சேதங்களின் மதிப்பு எவ்வளவு தெரியுமா...!
ஜப்பானில் புத்தாண்டு தினத்தன்று ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தில் பாரிய சேதங்கள் ஏற்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த சேதங்களின் மதிப்பு 17.6 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டக்கூடும் என ஜப்பான் அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நிலநடுக்க சேதம்
அரசாங்க மதிப்பீட்டின் படி, இஷிகாவிலும் இரண்டு அண்டை பகுதிகளிலும் ஏற்பட்ட சேதம், 9.98 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் ஐப்பானில் பதிவான பாரிய நிலநடுக்கங்களின் தரவுகளைப் பயன்படுத்தி, இந்தப் புள்ளிவிபரங்கள் கணக்கிடப்பட்டதாக அந்த நாட்டு அமைச்சரவை அலுவலக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
சீரமைப்பு நடவடிக்கைகள்
பனியாலும் சேதமடைந்த சாலைகளாலும் இஷிகாவாவில் சீரமைப்பு முயற்சிகளை மேற்கொள்ளும் போது சிக்கல்கள் ஏற்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், தொழிற்சாலைகளையும் துறைமுகங்களையும் மீண்டும் கட்டுவது, வெளியேற்றப்பட்டவர்களுக்கான தங்குமிடங்களை மேம்படுத்துவது, சுற்றுலாப் பயணிகளை அப்பகுதிகளுக்கு ஈர்ப்பது ஆகியவை இந்த ஆண்டுக்கான ஐப்பானின் திட்டங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |