காதலர்கள் இல்லாதவர்களுக்கு கைகொடுக்கும் ஜப்பான் அரசு
ஜப்பானில் ஏராளமான இளைஞர் மற்றும் யுவதிகள் காதலர்கள் இல்லாமல் தவித்து வருவதாகவும் இதனால் அவர்களின் மனச்சோர்வை போக்கும் வகையில் அரசாங்கம் புதிய முயற்சியில் இறங்கியுள்ளது.
இதன்படி ஜப்பான் அரசாங்கம் பிரத்தியேக இணையத்தளம் ஒன்றை தொடங்கி அதன் மூலம் வாடகை காதலியை தருவதாக அறிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரசின் இணையத்தளத்தின் மூலம் தொடர்பு

எனவே காதலன் அல்லது காதல் இல்லாதவர்கள் அரசின் இந்த இணையத்தளத்தின் மூலம் தொடர்பு கொண்டு ஒரு மணி நேரத்திற்கு 3000 ரூபாய் செலுத்தி வாடகை காதலி அல்லது காதலனை பெற்றுக் கொள்ளலாம்.
இந்த இணையத்தில் வயது சம்பளம் போன்ற விபரங்களை பதிவு செய்தால் அவர்களுக்கு தகுந்தவாறு வாடகைக்கு காதலன் அல்லது காதலி கிடைக்கும்.
அரசின் இந்த முடிவு இளைஞர்களின் வாழ்க்கையை சீரழித்து விடும் என ஜப்பான் நாட்டின் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
ஆனால் ஜப்பான் அரசு இதில் உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது