தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு: ஜீவனின் அடுத்தக்கட்ட நடவடிக்கை
தேயிலை மற்றும் இறப்பர் ஆகியவற்றுக்கான தொழிலாளர்கள் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள பிரதிநிதிகளுடனான சந்திப்பு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் நடைப்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பானது இன்று (28.02.2024) இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைமையகமான சௌமிய பவனில் இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பில் தொழிலாளர்களின் சம்பள உயர்வு மற்றும் சம்பள நிர்ணய சபையில் கோரிக்கைகளை முன்வைத்தல் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
கலந்துரையாடல்
இக்கலந்துரையாடலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் தேயிலை உற்பத்திக்கான சம்பள சபையின் அங்கத்தவர் மற்றும் சட்டத்தரணியுமான கா.மாரிமுத்து, இறப்பர் பயிரிடல் பதனிடல் சம்பள சபைக்கான அங்கத்தவர் மற்றும் உபதலைவருமான எஸ்.இராஜமணி ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.
மேலும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் அதன் நிர்வாகச் செயலாளர் எஸ்.பி விஜயகுமார், சிறிலங்கா சுதந்திர தொழிலாளர் சங்கத்தின் சார்பில் பி.ஜி சந்திரசேன, செங்கோடி சங்கத்தின் சார்பில் திருமதி.வி.ராஜலக்சுமி, சிறிலங்கா பொதுஜன தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் சிறிமான ஹெட்டிகே சாந்த மற்றும் ஜே.எஸ்.எஸ் சங்கத்தின் சார்பில் ஜே.ஏ.டி நிஸாந்த புஸ்பகுமார ஆகியோர் இதில் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |