ஜீவனின் பதவி விலகல் சர்ச்சை: வெளியான அறிக்கை!
பொறுப்புகளிலிருந்து விலகுவது தனது நோக்கமல்ல எனவும் காலத்தின் தேவைக்கேற்ப ஸ்தாபன கட்டமைப்பில் சில மாற்றங்களை செய்ய வேண்டியது அவசியம் எனவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் ஊடக அறிக்கையொன்றினை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தை தவறான புரிதலுடன் சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தகவல்களை கவனத்தில் கொள்ள வேண்டியதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இ.தொ.க
மேலும் குறித்த அறிக்கையில், “ஸ்தாபனத்தை ஜனநாயக முறையில் மேலும் வலுப்படுத்துவதே எமது நோக்கம்.

இதன் அடிப்படையில் மூன்று மாதங்களுக்குள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை கூட்டப்பட்டு தேவையான மாற்றங்கள் குறித்து தீர்மானிக்கப்படும்.
மேலும், தற்போது கட்சியின் அங்கத்தவர்களுடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றது. வெகு விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியிடப்படும்.
இதன் மூலம் கட்சியின் செயற்பாட்டு வேகத்தையும் மக்கள் சேவையின் தரத்தையும் அதிகரிப்பதே எமது நோக்கமாகும். “சமூகத்திற்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படும் போது, ஸ்தாபனம் உறுதியுடன் முன்னேற்றப் பாதையில் பயணிக்கும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
புலம்பெயர்தலின் வழியாக ஈழப் போராட்டத்திற்குத் துணைநின்ற தமிழர்கள்… 16 மணி நேரம் முன்