தப்பியோடிய போதகருடன் தொடர்பா - மகிந்த வெளியிட்ட அறிவிப்பு
தற்போது இலங்கையில் பேசுபொருள் என்னவென்றால் மதங்கள் தொடர்பில் போதகர் ஜெரோம் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்தும் அவர் நாட்டை விட்டு தப்பியோடியதும் தான்.
காவல்துறையினர் போதகர் ஜெரோம் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முடியாதவாறு நீதிமன்றில் பயணத்தடை அனுமதியை பெற முன்னரேயே அதாவது கடந்த 14 ஆம் திகதியே அவர் நாட்டை விட்டு தப்பியோடிவிட்டார்.
எந்தவித தொடர்பும் இல்லை

இந்நிலையில் அவர் தப்பியோடியதற்கு இலங்கையின் முன்னணி அரசியல்வாதிகளுடன் இருந்த தொடர்பே காரணம் என பரவலாக செய்திகள் வெளிவண்ணம் இருந்தன.
எனினும் மதபோதகர் ஜெரோம் பெர்னாண்டோ மற்றும் சிம்பாவே நாட்டு போதகர் யூபேர்ட் ஏஞ்சலுடன், முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சவுக்குத் தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் தனக்கு அவர்களுடன் எந்த விதமான தொடர்பும் இல்லையெனவும், தான் பிரதமராக இருந்த காலத்தில் போதகர் ஜெரோமின் அலுவலகத்திலிருந்து தன்னை சந்திக்க அழைப்பு வந்ததால் ஒரே ஒருமுறை தான் அவரை சந்தித்ததாகவும் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.