மின்சார சபை ஊடக பேச்சாளரின் கருத்திற்கு கடும் கண்டனம் வெளியிட்ட ஜீவன்
மாணவர்கள் குப்பிவிளக்கு போன்றவற்றை பயன்படுத்தி கல்விகற்க பழக வேண்டுமென இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் நொயல் பிரியந்த தெரிவித்த கருத்துக்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
குறித்த மின்சார சபையின் ஊடக பேச்சாளரின் கருத்தை அமைச்சர் ஜீவன் தொண்டமான் வன்மையாகக் கண்டித்ததுடன் அது ஏற்றுக்கொள்ள முடியாதது என தனது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டிருந்தார்.
ஜீவன் தொண்டமான்
மேலும் ஊடகப்பேச்சாளர் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் ஜீவன் எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சரான காஞ்சன விஜேசேகரவிடம் வலியுறுத்தியுள்ளார்.
இதையடுத்து அமைச்சர் ஜீவன் தொண்டமான் உட்பட சமூக செயற்பாட்டாளர்களிடமிருந்து எழுந்த கடும் எதிர்ப்பையடுத்து இலங்கை மின்சார சபையின் ஊடகப்பேச்சாளர் அப்பதவியில் இருந்து விலகியுள்ளார்.
காஞ்சன விஜேசேகர்
இது தொடர்பாக காஞ்சன தெரிவிக்கையில், “அவரின் கருத்து இலங்கை மின்சார சபையினதோ, அரசாங்கத்தினதோ அல்லது அமைச்சினதோ கருத்து அல்ல.
அத்துடன் அவர் வெளிப்படுத்திய கருத்துக்காக மன்னிப்பு கோருவதோடு ஊடகப் பேச்சாளர் பதவியில் இருந்து அவர் விலகியுள்ளார்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |