வெளிநாட்டிலிருந்து வந்த பெண்ணிடம் கிளிநொச்சி யுவதி கைவரிசை - வசமாக சிக்கினார்
Kilinochchi
Vavuniya
Sri Lanka Police Investigation
By Sumithiran
வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய பெண் ஒருவரின் டெபிட் கார்டை திருடி அந்த அட்டையை பயன்படுத்தி தங்க நகைகளை கொள்வனவு செய்த குற்றச்சாட்டில் 24 வயதுடைய பெண் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சியைச் சேர்ந்த சந்தேக நபர், வவுனியா குருமன்காடு பகுதியில் உள்ள தனது உறவினரின் வீட்டுக்குச் சென்றிருந்த போது குறித்த பெண்ணிடம் இருந்து அட்டையை திருடிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
தங்க நகைகள் மீட்பு
சந்தேகநபரிடம் இருந்து 2 வளையல்கள், 1 செயின் மற்றும் 2 காதணிகள் உட்பட பல தங்க நகைகள் மற்றும் பல பொருட்களை அடகு வைத்த ரசீது ஆகியவற்றை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்