ஜிந்துபிட்டிய துப்பாக்கி சூடு சம்பவத்துடன் தொடர்புடைய பெண் உள்ளிட்ட இருவர் கைது
கொழும்பு ஜிந்துபிட்டிய பகுதியில் உள்ள சிகை அலங்கார நிலையம் ஒன்றில் கடந்த 14 ஆம் திகதி நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒரு பெண் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டு மேலும் நான்கு பேர் காயமடைந்திருந்தனர்
குற்றச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் கொழும்பு வடக்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகளால் சந்தேகநபர்கள் நேற்று (27) கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
தப்பிச் சென்ற சந்தேகநபர்
நேற்று (27) கடவத்தை சூரியபலுவ பகுதியிலும், வெல்லம்பிட்டியின் வெஹெரகொடெல்ல பகுதியிலும், கொழும்பு வடக்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகள் குழு, 06 கிராம் 540 மில்லிகிராம் ஐஸ் என்ற போதைப்பொருளுடன் ஒரு ஆண் சந்தேக நபரையும், 03 கிராம் 100 மில்லிகிராம் ஐஸ் என்ற போதைப்பொருளுடன் ஒரு பெண் சந்தேக நபரையும் கைது செய்து கடலோர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

கைது செய்யப்பட்ட ஆண் சந்தேகநபர் வயது 44 என்றும், பெண் சந்தேகநபர் வயது 29 என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள் சேதவத்த மற்றும் வெஹெரகொடெல்ல பகுதிகளில் வசித்து வந்தவர்கள் ஆவர்.
மேலும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், குற்றச்சம்பவத்திற்குப் பின்னர் துப்பாக்கியுடன் தப்பிச் சென்ற மூச்சக்கர வாகனத்தின் சாரதியாக இந்த ஆண் சந்தேகநபர் இருந்ததும், பெண் சந்தேகநபர் அவருக்கு உதவி செய்ததும் தெரியவந்துள்ளது.
இருவரிடமும் 07 நாள் தடுப்பு உத்தரவு பெறப்பட உள்ளதுடன், காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |