அமெரிக்க அதிபர் தேர்தல் ஜனநாயகத்தைக் காப்பாற்ற நடத்தப்படும் யுத்தம் : டிரம்பை கடுமையாக சாடும் பைடன்
டிரம்ப் தனது தேர்தல் பிரசாரத்தில் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பேசிவருவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அதிபரான ஜோ பைடனின் பதவிக்காலம் வருகின்ற நவம்பர் மாதத்துடன் நிறைவடையவுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலும் நவம்பர் 05 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இந்நிலையில்,தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பாக அதிபர் பைடனும், குடியரசுக் கட்சியின் சார்பாக டிரம்ப்பும் போட்டியிடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடுமையான போட்டி
தேர்தலில் இருவருக்கும் இடையே கடுமையாக போட்டி நிலவும் என கூறப்படுகிறது.
இதன்படி, பைடன் டொன்ல்ட் டிரம்ப் தொடர்பில் குற்றச்சாட்டொன்றினை முன்வைத்துள்ளார்.
ஜனநாயகத்தைக் காப்பாற்ற நடத்தப்படும் யுத்தம்
இவ்விடயம் தொடர்பாக மேலும் அவர் குறிப்பிடுகையில், “டிரம்ப் அதிபர் ஆனால் ஜனநாயகத்தை அழித்து விடுவார்.
வரும் நவம்பர் மாதம் நடக்க உள்ள அதிபர் தேர்தல் ஜனநாயகத்தைக் காப்பாற்ற நடத்தப்படும் யுத்தம்.” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |