போருக்கு மத்தியில் - உக்ரைன் தலைநகருக்கு அதிரடியாக சென்ற பிரிட்டன் பிரதமர் (படங்கள்)
உக்ரைன் தலைநகருக்கு திடீரென சென்ற பிரித்தானியா பிரதமர் பொறிஸ் ஜோன்சன் அந்நாட்டு அரச தலைவர் ஜெலன்ஸ்கியை சந்தித்து முக்கிய பேச்சில் ஈடுபட்டார்.
ஜெலன்ஸ்கி-பொறிஸ் சந்திப்பை பிரித்தானியாவுக்கான உக்ரைன் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இரு தலைவர்களும் நேருக்கு நேர் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை பிரித்தானியாவுக்கான உக்ரைன் தூதரகம் அதன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
இதனிடையே பிரித்தனியா பிரதமரின் விஜயம் குறித்து டவுனிங் ஸ்ட்ரீட் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இந்த விஜயம் உக்ரைனிய மக்களுடனான "ஒற்றுமையின் நிகழ்ச்சி" என்று தெரிவித்துள்ளது.
சந்திப்பைத் தொடர்ந்து, உக்ரைனுக்கு ஆதரவாக 120 கவச வாகனங்கள் மற்றும் கப்பல் எதிர்ப்பு ஏவுகணை அமைப்புகளை பிரிட்டன் அனுப்பும் என்று டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்தது.
ஜெலென்ஸ்கியின் குழுவில் உள்ள மூத்த அதிகாரிகள் ரஷ்யாவுடனான மோதலின் போது இங்கிலாந்து தமக்கு ஆதரவளித்தமைக்காக பாராட்டை தெரிவித்தனர்.
அத்துடன் ரஷ்யாவின் 'கேவலமான' பொதுமக்கள் மீதான தாக்குதல்களுக்கு பிரதமர் கண்டனம் தெரிவித்துள்ளார் பிரதமர் ஜோன்சனின் கீவ் விஜயம் முன்கூட்டியே அறிவிக்கப்படவில்லை.


