பொது பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு நாமல் தரப்பு கடும் எச்சரிக்கை
இரண்டு வாரங்களுக்குள் பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகலவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி தரப்பு தெரிவித்துள்ளது.
குறித்த விடயத்தை பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமன்ன குறிப்பிட்டுள்ளார்.
பில்லியன் ரூபாய் இழப்பீடு
இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர் , “ பிரதி அமைச்சர் சுனில் வட்டகல நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச போதைப் பொருள் வர்த்தகர்களுடன் தொடர்புடையவர் என குற்றச்சாட்டு முன்வைத்து, அவரின் புகைப்படத்தையும் வெளிப்படுத்தினார்.
இதனை அவதூறு எனக் கருதி, நாமல் ராஜபக்சவின் சார்பில் ஒரு பில்லியன் ரூபாய் இழப்பீடு கோரி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.” என்றார்.
இந்த நிலையில், இதற்கு முன்னதாகவு பதில் அளித்திருந்த பிரதி அமைச்சர் வடகல, “நாமல் ராஜபக்ச எனக்கு வழக்கு தொடரவில்லை என்றால், நான் அவருக்கு எதிராகவே வழக்கு தொடர்வேன்” என்று சவால் விடுத்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
