பிரகீத் எக்னெலிகொட கொலை வழக்கு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இராணுவ புலனாய்வுப் பிரிவின் ஒன்பது உறுப்பினர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (18.07.20250 மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் நாமல் பலல்லே, மகேஷ் வீரமன் மற்றும் சுஜீவ நிசங்க ஆகியோர் அடங்கிய மூன்று பேர் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, அரசு தரப்பு சாட்சியிடமிருந்து சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட
அதன் பின்னர், சாட்சியங்கள் தொடர்பான விசாரணை ஒகஸ்ட் 29 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதேவேளை கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட பிரபல ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட வழக்கில் சானி அபேசேகரவும் ஒரு சாட்சியாளராக பெயரிடப்பட்டுள்ளார்.
தென்னிலங்கையில் இணையத்தள ஊடகவியலாளராக செயற்பட்ட பிரகீத் எக்னெலிகொட கடந்த 2010ஆம் ஆண்டு கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டார்.
அது தொடர்பான வழக்கு தற்போது கொழும்பு உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
இந்நிலையில், குறித்த வழக்கின் சாட்சியாளர்களில் ஒருவராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் சானி அபேசேகரவும் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

